32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பால் நேர்ந்த விபரீதம்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்துள்ள சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்றுக்காலை இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார், வீட்டிலிருந்த இரத்தகரைபடிந்த ஆடைகள் சிலவற்றையும் மீட்டுள்ளனர். அத்துடன் கூடையொன்றுக்குள் இருந்து சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்பு காரணமாகவே, இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பை பேணிவந்த 35 வயதான பெண்​ ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அத்துடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம், டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பெண்களின் பெரிய மார்பக வளர்ச்சி இயல்பான நார்மல் நிலைக்குக் கொண்டு வரவும் சுருங்கி முன் போன்ற அழகான மார்பகங்களைப் பெறவும்…

nathan

சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம். அதை எந்த வெளிப்பூச்சாலும் சிகிச்சையாலும் தர முடியாது..

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஏமாற அதிக வாய்ப்பிருக்காம்…

nathan

சூப்பர் டிப்ஸ்.. இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்!!

nathan

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan

63 வயதில் 6 வது முறையாக மனைவியை கர்ப்பமாக்கிய நடிகர்!

nathan

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

nathan

அடேங்கப்பா! தல அஜித்தை துரத்தி துரத்தி காதலித்த ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ!!

nathan

கணவரை பிரிந்துவிட்டாரா தொகுப்பாளினி பிரியங்கா

nathan