28.5 C
Chennai
Sunday, May 18, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

 

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே கரும்புள்ளிகளை போக்க வீட்டில் இருக்கும் எந்த பொருட்களை பயன்படுத்தினால் போகும் என்பதைப் பார்க்கலாம்.

* உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

* கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிறந்த மருந்து. இதனை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.

* எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம் போய்விடும்.

* தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

– மேற்கூறிய டிப்ஸ்களையெல்லாம் வீட்டில் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி, அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்…!

nathan

நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஷேர் செய்த போனி கபூர்- இதோ பாருங்க

nathan

வைரல் வீடியோ!செல் ஃபோனை திருடி சென்ற நபரை டிராஃபிக்கில் துறத்தி, பாய்ந்து பிடித்த காவலர்

nathan

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

முக அழகை பாதிக்கும் வியாதிகள் பற்றி தெரியுமா? கட்டாயம் இத படிங்க!…

sangika

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

nathan

சருமம் இயற்கையாகவே வெள்ளையாக்க சில ஜூஸ்கள்

nathan

முகத்தை பொலிவாக்கும் ஆலிவ் எண்ணெய்!

nathan

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

nathan