அழகு குறிப்புகள்

கழுத்தில் உள்ள கருமையை நீக்க சில எளிய வழிகள்

05-1423139977-6neckmask

உங்களது கழுத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்கள் மறைந்து சருமம் இறுக்கமடையவும், மென்மையாகவும் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 6 வகையான மாஸ்க் பற்றி தான் நாம் இந்த கட்டுரையின் மூலமாக அறியவிருக்கிறோம்.
அதுவும் இந்த மாஸ்க் வகைகளை நீங்கள், உங்கள் வீட்டு சமையல் அறையில்இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் தயார் செய்துவிடலாம்.

பெருவாரியானப் பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக அளவில் சரும பாதுகாப்பு வேலைகள் செய்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். முகத்தை விட அதிகமாய் கழுத்தில் தான் நிறைய வியர்வை தங்குகிறது, மற்றும் நகை, அணிகலன் அணியும் போது நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சரி வாருங்கள் இனி கழுத்தில் உள்ள கருமைகள் மற்றும் சுருக்கங்கள் மறைய வீட்டில் இருந்தபடியே மாஸ்க்குகளை எப்படி தயாரிப்பது என அறியலாம்…

எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர்

கழுத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர் ஓர் நல்ல காம்பினேசன். எலுமிச்சை ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக பயனளிப்பதால், உங்களது கழுத்து பகுதி நன்கு பொலிவடையும் மற்றும் பேக்கிங் பவுடர் உங்களது கழுத்து பகுதி சருமத்தை சுருக்கம் அடையாமல் இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது.

தக்காளி மற்றும் எலுமிச்சை மாஸ்க்

தக்காளி இங்கு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக இருந்து உங்களது கழுத்தில் ஏற்படும் கருப்புக் கோடுகளை அகற்றி வெண்மையடைய உதவுகிறது. தக்காளி ஜூஸை உங்களது கழுத்தில் நன்கு தேய்த்து கழுவிய பின்பு எலுமிச்சை ஜூஸை அதேப்போல பயன்ப்படுத்தவும். பின்பு நீங்கள் இந்த மாஸ்க்கை கழுத்து பகுதியில் உபயோகப்படுத்தி 2௦ நிமிடம் கழித்து தூய்மையான நீரில் கழுத்தை கழுவினால். சருமம் மென்மை அடையும்.

வெள்ளரி மற்றும் தக்காளி

வெள்ளரியையும், தக்காளியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதை கழுத்தில் மாஸ்க் போடவும். இது உங்களது கழுத்து பகுதி சருமத்தை இறுக்கமடைய உதவுகிறது. உங்கள் மேனி வெண்மையடைய விரும்பினால் இதோடு நீங்கள் எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ளாலாம்.

வால்நட் மாஸ்க் (walnut)

உங்களது கழுத்து பகுதியில் தங்கும் இறந்த செல்களை அகற்ற இந்த வால்நட் மாஸ்க் பயன்படுத்தலாம். மற்றும் வால்நட்டில் உள்ள வைட்டமின் ஈ உங்களது கழுத்து பகுதி சருமத்தை மிருதுவாக்கிட உதவுகிறது.

பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

கழுத்து பகுதி சருமத்திற்கு இந்த பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை மாஸ்க் மிகவும் நல்லது ஆகும். ஏனெனில், பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ இயற்கையானது ஆகும். இதோடு ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சையை சேர்த்துப் பயன்படுத்துவது ஒரு நல்ல காம்பினேசன் ஆகும்.

அரிசி தண்ணீர்

உங்களது கழுத்தில் இருக்கும் கருமை அகல வேண்டுமெஎனில் அரிசி தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இது நல்ல பயன் தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button