30.1 C
Chennai
Monday, Apr 21, 2025
614784e0806c559ce4
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்.

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையை உடம்பை விட்டு வெளியேற்றுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்…

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே வராது.
அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Related posts

பெண்களுக்கு வரும் மாரடைப்பு நோய் அறிகுறிகள்

nathan

உடல் எடையை குறைக்கும் முட்டை!….

nathan

எலுமிச்சை 7 பலன்கள்

nathan

உங்களுக்கு சீக்கிரமா வயசாகாம இருக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பச்சிளம் குழந்தைகளுக்கு வெங்காயம் இப்படி எல்லாம் பயன்படுத்தலாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்ததும் இந்த செயலை கட்டாயம் செய்யுங்கள்!

nathan

கொரோனா சிகிச்சைக்கா மாத்திரை! வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்!

nathan

ஜாக்கிரதை! மாரடைப்பை ஏற்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரம்….

nathan

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

nathan