26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
701 main
ஆரோக்கிய உணவு

வாங்க தெரிஞ்சுக்கலாம்… யோகர்ட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

நமது உடலில் நோயெதிப்பு சக்தி என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனெனில் நோய்கள் நம்மை அண்டாமல் காக்க இந்த நோயெதிப்பு சக்தி மிகவும் முக்கியம். நம்முடைய நோயெதிப்பு மண்டலம் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ அதைப் பொருத்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இதுவே உங்க நோயெதிப்பு சக்தி குறைந்தால் என்னாகும். அடிக்கடி நோய்வாய்ப்பட ஆரம்பிப்பீர்கள். பின்னாளில் அதுவே பெரிய பிரச்னைக்கு காரணமாகி விடும் அல்லவா?

Does Yoghurt Boost The Immune System?

அப்படியெனில் எல்லோரும் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. அந்த வகையில் பார்க்கும் போது யோகர்ட் நம்முடைய நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது போன்று நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.9 vitamind

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகர்ட்

யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் பாக்டீரியோசின்கள் எனப்படும் பொருட்களை உருவாக்குகிறது. இதனால் பாக்டீரியா தொற்றால் வரக்கூடிய நோய்கள் நமக்கு வருவதில்லை. மேலும் யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் நம் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பால் மற்றும் தயிர்

எப்படி பாலில் மஞ்சள், குங்குமப் பூ போட்டு குடித்தால் நோயெதிப்பு சக்தி அதிகரிக்குமோ, அதே மாதிரி உங்கள் உணவில் தயிர் மற்றும் யோகர்ட்டை சேர்த்து வந்தாலும் நோயெதிப்பு சக்தி அதிகரிக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு சுடான சாதத்தில் தயிர் அல்லது யோகர்ட் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.

துளசி மற்றும் கருப்பு மிளகு

தினமும் உங்க நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க 3 – 5 துளசி இலைகள் மற்றும் மிளகை வெறுமனே மென்று வரலாம். இது உங்க சுவாச பாதையில் உள்ள அழற்சியை போக்குகிறது. இதே மாதிரி நீங்கள் கருப்பு மிளகையும் சாப்பிடலாம்.

இஞ்சி மற்றும் பூண்டு

இஞ்சி மற்றும் பூண்டு நம் நோயெதிப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பூண்டில் அல்லிசின், துத்தநாகம், சல்பர் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ ஆகியவை உள்ளன. எனவே இஞ்சி டீ மற்றும் பூண்டு பால் என்று குடித்து வருவது உங்க நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய்

வைட்டமின் சி நம்முடைய உடலில் தொற்றால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. இந்த வைட்டமின் சி எலுமிச்சை மற்றும் நெல்லிக்காயில் அதிகளவில் இருக்கிறது. எனவே எலுமிச்சை ஜூஸ் மற்றும் நெல்லிக்காய் ஜூஸை அதிகமாக குடித்து வாருங்கள்.

க்ரீன் மற்றும் பிளாக் டீ

க்ரீன் மற்றும் பிளாக் டீ உங்க நோயெதிப்பு சக்தியை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு கப்க்கு மேல் குடிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர்

மேற்கண்ட பொருட்களை எடுத்துக் கொள்வதோடு உங்க நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க நீரும் அவசியமாகிறது. எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

உங்களுக்கு நோயெதிப்பு சக்தி குறைவாக இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
உங்களுக்கு நோயெதிப்பு சக்தி குறைவாக இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல்

மற்றவர்களை விட உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உங்க நோயெதிப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இதற்காக நீங்கள் சில சோதனைகளை கூட செய்து கொள்ளலாம்.

701 main
வெப்பநிலை

ஒரு சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை 36.3 டிகிரி. இந்த டிகிரிக்கு கீழே உடல் வெப்பநிலை இருக்க கூடாது. ஏனெனில் 33 டிகிரியில் குளிர்ந்த நிலையில் வாழும் வைரஸ்கள் வாழ்கின்றனர். இவைகள் உங்க உடல் வெப்பநிலை குறையும் போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

வைட்டமின் டி

வைட்டமின் டி நமது நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சத்தாகும். இந்த வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும் நோயெதிப்பு சக்தி குறைவாக இருக்கும். சோர்வு, தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவை உங்க நோயெதிப்பு சக்தி பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. எனவே வைட்டமின் டி பற்றாக்குறையை சரிசெய்ய முயலுங்கள். வைட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வது, காலையில் உடலில் சூரிய ஒளி படும்படி செய்வது உங்களுக்கு வைட்டமின் டியை கிடைக்க உதவி செய்யும்.

Related posts

தெரிந்து கொள்வோம்.. முளைவிட்ட பச்சைப்பயிறு தரும் நன்மைகள்..

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

உங்களுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை படிங்க

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!

nathan

சுவையான மசாலா பிரட் உப்புமா

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை உதவும் புளி

nathan

பதப்படுத்தாத அல்லது சமைக்காத அசைவ உணவு எச்சரிக்கை

nathan

பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

nathan

களைப்பைப் போக்கும் கற்றாழை!

nathan