27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
625.500.560.350.160.300.053.80 1
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சுகோங்க! வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா? அலட்சியம் வேண்டாம்!

பொதுவாக எலுமிச்சை சாறு நல்லதுதான். பலவித நன்மைகளை நமக்கு தருகிறது. ஆனால் அதை எப்போது நீங்கள் குடிக்கிறீர்கள் என்பது முக்கியம்.

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பதை நிறைய பேர் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு குடிப்பதால் பலவித பாதிப்புகள் ஏற்படும்.

அப்படி குடிப்பதால் பல பிரச்சனைகள் உண்டாகிறது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

  • எலுமிச்சை சாறு நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே இருந்தால் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
  • வயிறு உப்புசம், வயிறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் உனவுக்குத் தேவையான அமிலத்தை உடல் சுரக்கும்போது, எலுமிச்சையின் அமிலமும் சேர்ந்து சிக்கல்களை உண்டு பண்ணும்.
  • அல்சர் இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் உடனே எலுமிச்சை சாற்றினை வெறும் வயிற்றில் குடிப்பவர்கள் நிறைய உண்டு. ஆனால் அது மிகவும் தவறு. அல்சர் இருப்பவர்களுக்கு குடலின் சுவரில் புண்ணாகியிருக்கும்.
  • அது ஆறுவதற்கு நாட்கள் பிடிக்கும். எலுமிச்சை சாறு குடிக்கும்போது அது புண்ணை இன்னும் அதிகப்படுத்தும். ஆற விடாது. ஆகவே எலுமிச்சை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள்.
  • எலுமிச்சை சாறு அடிக்கடி சிறு நீர் கழிப்பதை தூண்டும். அதிலுள்ள விட்டமின் சி உடலிலுள்ள சோடியத்தை அதிகம் வெளியேற்றும் பண்பு கொண்டது.
  • இது நல்லது என்றாலும் எலுமிச்சை சாறினை அதிகம் குடிக்கும்போது அடிக்கடி சிறு நீர் கழிக்கத் தோன்றுவதால் சோடியம் அளவு வெளியேறிக் கொண்டேயிருக்கும்.
  • நிறைய பேர் எலுமிச்சை தோலை உணவில் சேர்க்க ஆரம்பிகிறார்கள். எலுமிச்சைத் தோலை வேக வைத்து குடிப்பதுண்டு.
  • எலுமிச்சை தோலில் அதிக அக்ஸலேட் இருப்பதால் அதனை தினமும் சேர்த்துக் கொள்ளும்போது அல்லது வேக வைத்து குடிக்கும்போது அதிலுள்ள ஆக்சலேட் கற்களாக மாறி சிறு நீரக பிரச்சனையை தருவதுண்டு.
  • எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ அல்லது வெறும் வயிற்றில் குடித்தாலோ சிறு நீரகக் கற்கள் போல் பித்தப்பையிலும் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
  • அதன் தோல் வேக வைத்த நீர் குடிக்கும்போது ஆக்ஸ்லேட் எளிதில் பித்தப்பையை அடைவதால் இந்த பிரச்சனை உண்டாகும்.
  • வெறும் வயிற்றில் குடிக்கும்போது எலுமிச்சையின் அமிலத்தன்மை நேரடியாக பற்களின் மேல் படும்.
  • தொடர்ந்து அல்லது அடிக்கடி குடிக்கும்போது அதன் பல் எனாமல் பாதிக்கப்படுகிறது.
  • இதனால் பல் கூச்சம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். பின் அதன் ஈறுகளும் வீக்கமடையும்.625.500.560.350.160.300.053.80 1
எப்போது குடிக்கலாம் ?

அதற்காக எலுமிச்சை சாற்றினையே குடிக்கக் கூடாது என்பதில்லை.

எலுமிச்சை சாறினை குடிப்பதால் ஸ்கர்வி நோயை குணமாக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.இது சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துகிறது. நச்சுக்களை அளிக்கின்றது.

வெறும் வயிற்றில் அல்லது நாளுக்கு 4, 5 முறைகள் என குடிப்பது மிகவும் தவறு. ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது வாரம் 4 முறை என அளவோடு குடித்தால் அதன் அத்தனை நன்மைகளை பெறலாம்.

எலுமிச்சை சாறு செய்யும்போது அதில் உப்பு சிறிது சேர்த்தால் அதன் அமிலத்தன்மை மட்டுப்படும்.

Related posts

புற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.!

nathan

சுவையான கொண்டைக்கடலை கட்லெட்

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தி தரும் சிறு தானியங்கள்….

nathan

சளித்தொல்லைக்கு உகந்த தூதுவளை ரசம்

nathan

சீனி பணியாரம்

nathan

அத்திப்பழம் பால் குடித்தால் போதும்! அப்பறம் நடக்கும் அதிசயத்தை பாருங்க

nathan

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரியாணி சாப்பிடுவதில் உள்ள சாதக, பாதகங்கள்

nathan

ஹஜ் பெருநாள் ஸ்பெஷல்:சுவையான மட்டன் ‘தம்’ பிரியாணி செய்முறை!

nathan

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika