மாம்பழத்தைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். பழங்களின் ராஜா தான் மாம்பழம்.
இந்த மாம்பழம் கோடையில் அதிகம் விலை மலிவில் கிடைக்கும். மேலும் மாம்பழம் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்றும் கூட.
மாம்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது.
குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். அதோடு இன்னும் பல்வேறு நன்மைகளையும் மாம்பழம் வாரி வழங்கும்.
எனினும், அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் பிரச்சனைதான். அதற்கு மாம்பழமும் விதி விலக்கல்ல. அந்த வகையில், மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எடை அதிகரிக்கும்
நன்கு கனிந்த ஒரு மாம்பழத்தில் சுமார் 135 கலோரிகள் உள்ளது.
ஆகவே மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும். அதேப்போல் மாம்பழம் சாப்பிடும் நேரமும் முக்கியமானது.
ஒருவர் உடற்பயிற்சி செய்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை அளவு
மாம்பழத்தில் ஃபுருக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. அது தான் மாம்பழத்திற்கு இனிப்புச் சுவையைத் தருகிறது.
மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோய் வர வழிவகுத்துவிடும்
இரைப்பை குடல் பிரச்சனைகள்
பழுக்காத மாம்பழங்களை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே மாங்காயை அதிகம் சாப்பிடாதீர்கள்.
தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல்
நன்கு கனிந்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும். முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாய்ப் புண்
ஒரே நேரத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது வாயைச் சுற்றி, உதடு மற்றும் நாக்கு நுனிகளில் புண் அல்லது வெடிப்புக்களை உண்டாக்கும்.
சாப்பிடக்கூடாதவர்கள்
- ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது.
- அதிலும் மாம்பழம் மட்டுமின்றி, மாங்காயையும் தான் அளவாக சாப்பிட வேண்டும்.
- இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.