25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.160.90
ஆரோக்கிய உணவு

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

 

குழந்தைகளுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுங்கள்.

பல பல எண்ணெய் கலந்த ஸ்நாக்ஸ் தினமும் செய்து கொடுத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

அதனால் இந்த விடுமுறை நாட்களில் ஆரோக்கியமாகவும், உடலுக்கு சத்து தரக்கூடியதாகவும், சுவை மிகுந்த கோதுமை பாயாசம் எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம்:

பொருட்கள்
  • உடைத்த கோதுமை – 1 கப்
  • பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை பழங்கள் – 10
  • வெல்லம் – 1 கப்
  • நெய் – 5 மேசைக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • பால் – 1/2 கிண்ணம்
  • கசகசா – 2 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – 3 கப்
  • பாப்பி விதைகள் – 3 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் பொடி – 1 மேசைக்கரண்டி625.500.560.350.160.300.160.90

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் உடைத்த கோதுமையை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள்.
  • பின்னர் குக்கரில் ஊற வைத்த உடைத்த கோதுமையை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேக வையுங்கள்.
  • விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.
  • ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி கசகசவை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • கடாயில், வெல்லத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கொதிக்க விடுங்கள்.
  • வெல்லப்பாகு ரெடியானதும், ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளுங்கள்.
  • இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும்.
  • அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி விடவேண்டும்.
  • நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
  • சுவையான கோதுமை பாயாசம் தயார்.

Related posts

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

nathan

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை படிப்படியாக குறைக்கும் உணவுகள்!

nathan

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயின் அற்புத நன்மைகள்

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பானிபூரி சாப்பிடலாமா?

nathan

உடல் எடையைக் குறைக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இந்த ஆபத்துக்களை விரட்டியடிக்க முடியும்!

nathan

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

nathan