27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
1 almonds
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! 6 பாதாம் மட்டும் தினமும் சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க..

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம், பாஸ்பரஸ், இரும்பு போன்றவை இருக்கின்றன. இருந்த போதிலும் பாதாம் பருப்பை அளவோடு தான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கும் என்பதால் அளவுக்கு மீறி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.

பாதாம் பருப்பில் கலோரிகளும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.

நம் உடலுக்கு சராசரியாக 15 மி கிராம் வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக பாதாம் உட்கொள்ள கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் நமது உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.1 almonds

பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி உட்கொள்ள கூடாது, மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது.

பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.

Related posts

ஆரோக்கியத்தைத் தரும் ராகி உப்புமா! எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

nathan

மீந்து போன சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்

nathan

நாம் தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் இத்தனை நன்மைகளா…?இத படிங்க!

nathan

உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

தங்கமான விட்டமின்

nathan

காளான் மசாலா

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !

nathan

நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்!

nathan