ஆரோக்கிய உணவு

காளான் மசாலா

காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும்.

மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Peas Mushroom Masala
தேவையான பொருட்கள்:

காளான் – 1 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப் (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.

பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் காளானை போட்டு, காளான் தண்ணீரை வெளியேற்றும் வரை நன்கு சுருங்க வதக்கி இறக்கி, கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, அத்துடன் பட்டாணியையும் சேர்த்து, 8-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி காளான் மசாலா ரெடி!!!

Related posts

உணவைக் குறைத்து உடலை அழகாக்க..

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…எந்த மிளகாயை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு எரியும் தெரியுமா? பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி – மூன்றில் எது நல்லது??

nathan

உங்களுக்கு தெரியுமா உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan