28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053. 4
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! ஒரு கையளவு வேர்கடலை போதும்…! இதய நோய் உங்களை கண்டாலே அலண்டு ஓடி விடும்?

வேர்கடலை சாப்பிட்டால் இதய நோய் வராது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னரே பல ஆய்வாளர்கள் வேர்கடலை இதய நலனை அதிகரிக்கவும், மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது என கண்டறிந்து கூறிவிட்டனர்.

ஆண், பெண், வயது என எந்த பாகுபாடும் இல்லாமல், அனைவரின் இதயத்திற்கும் வலுவை சேர்க்கும் திறன் கொண்டது வேர்கடலை.


ஒரு கையளவு போதும்
வாரத்தில் ஐந்து நாட்கள் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலை நீங்கள் சாப்பிட்டு வந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியம் அடைவது மட்டுமின்றி., இதய நோய்கள் ஏற்படும் சதவீதம் 50% குறையும்.

மேலும், இதய கோளாறால் ஏற்படும் இறப்பையும் வேர்கடலை 24% குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

625.500.560.350.160.300.053. 4
வேர்கடலையில் எல்.டி.எல் எனப்படும் தீய கொலஸ்ட்ரால் குறைவாகவும், எச்.டி.எல். எனப்படும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும் இருக்கிறது.

இதனால் தான் இதய கோளாறு உள்ளவர்கள் வேர்கடலை மற்றும் ஆலிவ் ஆயில் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக்கப்படுகிறது.

உங்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்துக் கொண்டாலே இதயத்தின் செயற்திறன் மற்றும் ஆரோக்கியம் எப்போதும் மேம்பட்டு இருக்கும்.

ஆகவே, நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கொலஸ்ட்ரால் எச்.டி.எல் -ஆ அல்லது எல்.டி.எல்.-ஆ என்பதை முதலில் அறிந்து உட்கொள்ளுங்கள்.

ஆலிவ் என்னை, பீன்ஸ், பருப்பு வகைகள், நார்ச்சத்து உணவுகள், தானியங்கள், ஆளிவிதைகள், நட்ஸ் உணவுகள் போன்றவற்றில் எச்.டி.எல் எனும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கின்றன.

Related posts

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்

nathan

முட்டைகோஸ் ஜூஸினால் இவ்வளவு நன்மைகளா?

nathan

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 12 சிறந்த உணவுகள்!!!

nathan

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்

nathan

நீங்கள் இளமை, ஆரோக்கியத்துடன் வாழ உதவும் காப்பர் உணவுகள்!முயன்று பாருங்கள்

nathan

கண்டிப்பாக ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan