மருத்துவ குறிப்பு

சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும் இந்த கைவைத்தியங்கள்!.

தற்போதைய வல்கிய முறையில் மக்கள் சந்திக்கும் பெரும் பிரச்சினைகளில் சிறுநீரக கற்கள் ஒன்றாகிவிட்டது. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள்:

ஒன்று வெளியில் இருந்து வருவது. இவ்வாறு உருவாகும் கற்கள் உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் வரும். மற்றொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் உருவாவதாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கான அறிகுறிகள் முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, பின் அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.

சிறுநீரக கல்லை வெளியேற்ற எளிய வழிமுறைகள்:

தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 1 முறையாவது குடிக்க வேண்டும்.

அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம். வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.Surgery for kidney stones SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button