36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா சந்தையில் மீன் வாங்க செல்லும்போது கவனிக்க வேண்டியது என்ன ?

வீட்டில் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் மீனை சேர்க்க வேண்டும். அதுவும் கடல் மீன்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், அயோடின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.பொதுவாக நாம் அனைவரும் மார்கெட் சென்றால் வெண்டைக்காயை உடைத்துப் பார்த்து வாங்குவோம், பீட்ரூட்டை கீறிப் பார்த்து வாங்குவோம், தேங்காயை ஆட்டிப் பார்த்து வாங்குவோம். அதேப்போல் மீனை எப்படி வாங்குவது என்று நீங்கள் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனென்றால் இங்கு மீனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மீன் பார்க்கும் போதே புதிது போல் இருந்தால் அது நல்ல மீன்.

மீனின் கண்களைப் பார்க்கும் போது அது தெளிவாக இருந்தால் அது நல்ல மீன். ஒருவேளை அதன் கண்கள் மங்கலாக இருந்தால் அந்த மீனை வாங்கக் கூடாது .
நீங்கள் சாப்பிட ஆசைப்பட்ட மீனின் மீது ஏதேனும் காயங்கள் இருந்தால், அதை வாங்காதீர்கள். இந்த ஒரு விடயத்தை வைத்து நீங்கள் கண்டு பிடித்து விடலாம். அதிலும் குறிப்பாக மீன்களின் செவுளைத் திறந்து பார்க்கும் போது, அது செந்நிறத்தில் இருந்தால் நல்ல மீன். அதுவே சாம்பல் நிறத்தில் இருந்தால், அது கெட்ட மீன்.

Related posts

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!! பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க வீட்டில் இந்த உணவுகள் மிச்சமாயிடுச்சா? கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.

nathan

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

nathan

சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?

nathan

வாய்க்கு ருசி… உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!! சோள கொழுக்கட்டை & கீரைப் பொங்கல்!! ~ பெட்டகம்

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

nathan