27 C
Chennai
Thursday, Nov 14, 2024
jeerawater
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தினமும் இரவில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

மசாலா பொருட்களுள் ஒன்றான சீரகம் வெறும் சமையலில் மட்டும் பயன்படுவதில்லை. இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீரகம் உணவிற்கு நல்ல மணத்தைக் கொடுப்பது மட்டுமல்லாது, உடலினுள் சென்று பல அற்புதங்களைச் செய்கிறது. அதாவது பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.

ஒருவர் சீரகத்தை சமையலில் மட்டும் சேர்க்காமல், அந்த சீரகத்தைக் கொண்டு ஒரு டீ தயாரித்துக் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம்மில் பலரும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்போம். இந்த சீரக நீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சீரகத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து டீ தயாரித்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியுமா? இக்கட்டுரையில் அந்த சீரக டீயின் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

சீரகத்தில் உள்ள சத்துக்கள்
மிகச்சிறிய அளவிலான சீரகத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் உள்ள சத்துக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான உடலைப் பெற உதவி புரிபவையாகும்.

இப்போது சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.jeerawater

எடை குறையும்
சீரக டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். இந்த டீயில் உள்ள சீரகம் மற்றும் எலுமிச்சை, உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும். எனவே உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன் சீரக டீயை மறக்காமல் குடித்து வாருங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, சீரக டீயை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நச்சுக்கள் நீங்கும்
சீரக டீயை தினமும் இரவில் குடித்து வந்தால், உடலினுள் தேங்கி இருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாக இருக்கும். உடலினுள் நச்சுக்களின் தேக்கம் இல்லையென்றால், உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்த டீ இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.

மலச்சிக்கல் குணமாகும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் சீரக டீயை தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகிவிடும். சொல்லப்போனால் இந்த பானம் காலையில் அலாரம் வைத்தது போன்று உங்களை எழுப்பிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கும்.

இரத்த சோகை நீங்கும் சீரக டீ இரத்த சோகை பிரச்சனையை இயற்கையாக சரிசெய்யும். ஒருவருக்கு இரத்த சோகை பிரச்சனையானது இரும்புச்சத்து குறைபாட்டினால் வரக்கூடியது. எனவே தினமும் ஒரு டம்ளர் சீரக டீயைக் குடித்து வந்தால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

சளி குணமாகும் நீங்கள் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா?அப்படியானால் சீரக டீயை தினமும் தவறாமல் குடியுங்கள். இதனால் மார்பு பகுதியில் சளி தேங்குவது தடுக்கப்படுவதோடு, தொடர்ச்சியான இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

ஆரோக்கியமான கல்லீரல் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவதில் மிகச்சிறந்த பானம் தான் சீரக டீ. இந்த சீரக டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது பித்த நீர் உற்பத்திக்கு உதவி புரிந்து, கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

சீரக டீ தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்: * சீரகம் – 1 டீஸ்பூன் * எலுமிச்சை – பாதி * தேன் – சுவைக்கேற்ப * தண்ணீர் – 1 1/4 டம்ளர்

செய்முறை: * ஒரு பாத்திரத்தில் 1 1/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சீரகத்தைப் போட்டு, ஒரு டம்ளராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். * பின் அதை இறக்கி வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொண்டால், சீரக டீ தயார்!

Related posts

உளுந்தங்கஞ்சி

nathan

சூப்பர் டிப்ஸ்- இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.

nathan

தாமரை விதையை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

nathan

நீங்கள் இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!!

nathan

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்

nathan

உங்களுக்கு தெரியுமா குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

கறிவேப்பிலை சட்னி

nathan

சூப்பர் டிப்ஸ்!வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!!

nathan