22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
ttftf
ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! டிப்ஸ்..டிப்ஸ்.

தக்காளி சட்னி செய்யும்போது சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும்.
பனங்கிழங்கை பொடியாக நறுக்கி சின்ன வெங்காயம், மிளகாய், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மாவின் அளவுக்கு சரி பாதி அதாவது, ஐம்பது சதவிகிதம் தண்ணீர்விட்டு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
ரசத்தை இறக்கும்போது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து இறக்கினால் , ரசம் தனிச்சுவையுடன் இருக்கும்.
ttftf

வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது அத்துடன் சிறிது முருங்கைகீரையை சேர்த்து செய்தால் சுவையாகவும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.
சுண்டல் செய்ய பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவைகளை ஊற வைக்க மறந்துவிட்டால் ஒரு பிளாஸ்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி, கொண்டைக் கடலையைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்தால் டக்கென்று ஊறிவிடும்.

கட்லெட் சில டிப்ஸ்கள்
கட்லெட் தயாரிக்க பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் சோளமாவும் சேர்க்கலாம். கட்லெட்க்கு அதிக ருசி கிடைக்கும்.

கட்லெட் தயாரிக்க வைத்திருக்கும் பொருள்களில் மல்லி இலையோ, செலரியோ சிறிதளவு நறுக்கி சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.

கட்லெட் பொரித்தெடுக்கும்போது அது மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால் கட்லெட் சரியாக வேகாது. அல்லது கட்லெட்டை தோசைக் கல்லில் நெய் ஊற்றி அதிலும் சுட்டெடுக்கலாம்.

நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகுத்தூள், வேக வைத்த காலிஃப்ளவர் போன்றவை சேர்த்தும் கட்லெட் செய்யலாம்.

கட்லெட் உடையாதிருக்க மெதுவாக திருப்ப வேண்டும்.

Related posts

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

தலைமுடியில் ஏன் எண்ணெய் தடவ வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

12ராசிக்கும் ஏற்படப்போகும் யோகம் என்ன?ஜூன் மாதத்தில் மாறும் கிரகங்களின் மாற்றம்…

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் காதலில் ரொம்ப மோசமானவர்களாம்…

nathan

எந்த சுகாதார பிரச்சனையும் இல்லாமல் வாழ வேண்டுமா?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை சிறுநீரில் கல் வர காரணங்கள்,,,

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஈஸியா ஏமாந்துறுவாங்களாம்…

nathan

ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா

nathan

தலை சீவும் போது யோசிக்க வேண்டியவை

nathan