34.7 C
Chennai
Tuesday, May 28, 2024
veijil
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வெயில் காலத்துக்கு உகந்த ஆடை!…

கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும். ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் ஆடைகள் அணிவது உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

veijil

ஆடைகளின் நிறம்:

கோடைக்கு ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வன்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அடர் நிறங்களை விட, வெளிர் நிற ஆடைகள்தான் கோடைக்கு ஏற்றவை. கறுப்பு, சிவப்பு மற்றும் ‘பளிச்’ வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே, கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

பருத்தி ஆடை:

கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதாவது பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது.

கோடையினால் நம் உடலில் வெளியேறும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்றும் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமலும் செய்கிறது. இதனால் வெப்பத்தை வெளியேற்ற காற்றை உள்ளே இழுக்கச் செய்கிறது.

இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் குறைகிறது. கோடையில் சிந்தடிக், பாலிஸ்டோர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்துவிதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.

Related posts

கைசுத்தம் காப்போம்!

nathan

செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க!

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும வரட்சியும் தீர்வுகளும்

nathan

உங்களுக்கு தெரியுமா காலிபிளவரில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது..?

nathan

பெண்களுக்கு ஏன் தாடி வைத்த ஆண்களைப் பிடிக்கிறது என்று தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

நம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

nathan

பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.

nathan

இதோ அசத்தல் ஐடியா.! பயணத்தின் போது வாந்தி எடுப்பவரா நீங்கள்..?

nathan