29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சோற்றுக் கற்றாழைமருத்துவ குணங்கள்

சோற்றுக் கற்றாழையின் தாவர பெயர் “ஆலோவேரா’. கற்றாழையில் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை, மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை மடல்களை பிளந்து, நுங்கு சுளை போல் உள்ள சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, நல்ல தண்ணீரில், ஏழு முறைக்கு மேல் நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம்.
சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, இட்லி பானையில் பால் விட்டு, தட்டில் வேர்களை வைத்து, ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு காய வைத்து, பொடி செய்து, தினம் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டால், தாம்பத்திய உறவு மேம்படும்.
கற்றாழையின் சதைப்பகுதியை பாத்திரத்தில் வைத்து, சிறிது படிகாரத்தூளை தூவினால், சதைப்பகுதியில் உள்ள நீர் பிரிந்து விடும்.
அந்த நீருக்கு சமமாக, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து, நீர் சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் தலைக்கு தடவி வந்தால், கூந்தல் நன்றாக வளரும். இரவில் நல்ல தூக்கம் வரும்.
முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்பு இருந்தால், சிறிது கற்றாழை சாறை தினமும் முகத்தில் தடவி வந்தால், நல்ல குணம் கிடைக்கும். தீக்காயங்களுக்கும், சவரம் செய்யும் போது ஏற்படும் கீறல்களுக்கும் கற்றாழைச் சாறு நல்ல மருந்து.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து, காலையில் வெந்நீரால் கழுவினால், முகத்தில் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். கண் நோய், கண் எரிச்சலுக்கு, கற்றாழைச் சோற்றை கண்களின் மீது வைக்கலாம்.
விளக்கெண்ணையுடன் கற்றாழை சோறை காய்ச்சி, காலை, மாலை இருவேளைகள் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி, மேனி பளபளப்பாக தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் தீரும்.

Related posts

உடம்பில் உள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இந்த 7 அற்புத டீயை எடுத்துகோங்க போதும்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்… இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் பீட்ரூட்…!!

nathan

யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி இவருக்கு வயது 44 ஆகும்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் வெட்டி வேரின் நன்மைகள் என்ன ??

nathan

இத படிங்க அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

nathan

வீட்டில் இந்த மீன்கள் வளர்த்தால் செல்வம் பெருகும் !தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பூவரசு இயற்கை மருத்துவமும், கருப்பையைக் காக்கும்

nathan

இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க போதும்!

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan