ஆரோக்கிய உணவு

வெயிலுக்கு நீர்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் – பாசிப்பருப்பு சாலட்

வெயிலுக்கு நீர்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் - பாசிப்பருப்பு சாலட்
>தேவையான பொருட்கள் :வெள்ளரிக்காய் – 1,
பாசிப்பருப்பு – அரை கப்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு, எண்ணெய் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – பாதி,
எலுமிச்சைப் பழச்சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவுசெய்முறை:

• வெள்ளரிக்காயை தோல் சீவிப் பொடியாக நறுக்கவும்.

• பாசிப்பருப்பை ஊறவைத்து வடிகட்டவும்.

• ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், பாசிப்பருப்பு, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சைச் சாற்றை விட்டு நன்றாக கலக்கவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைப் போட்டு, தாளித்து வெள்ளரிக்காய் கலவையில் கொட்டி கிளரவும். .

குறிப்பு:

தாகத்தைத் தணிக்கக்கூடிய காய்களில், வெள்ளரியும் ஒன்று. பச்சையாகச் சாப்பிடலாம். மிளகுத்தூள், உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். தயிர்ப்பச்சடி தயாரிக்கலாம்.

பலன்கள்:

100 கிராம் வெள்ளரியில் 15 கலோரி மட்டுமே கிடைக்கும். எனவே, குண்டாக இருப்பவர்கள், எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.  நார்ச்சத்து, நீர்ச்சத்து, தாது உப்புக்கள் இதில் அதிகம். குளிர்ச்சி தரக்கூடியது.

Related posts

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் குடிப்பதனால் தீமைகள் ஏற்படுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் இரவில் ஊற வையுங்கள்! மறுநாள் சாப்பிடுங்கள்!

nathan

சூப்பரான புடலங்காய் கூட்டு

nathan

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

nathan

உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க… எடை குறைப்பு உணவு 30 வகைகளை இங்கே

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan

தொப்பையை குறைக்க உதவும் 15 உணவுகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை

nathan