30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே பல விதமான நோய்கள் பரவக்கூடும். அதிலும் வீட்டில் வளர்க்கும் குழந்தைகளை நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவர்கள் மழைக்கால தொற்றுகளால் எளிதில் தாக்கப்படக் கூடும். இப்பதிவில் மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

மழைக்காலத்தில் தொற்று நோய் என்பது கொசு, காற்று, தண்ணீர் , கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றின் மூலமாகவே பரவுகிறது.

அதிலும், குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவுவதுதான் நோய்க்கான முக்கிய காரணமாக இருக்கும். குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்கக்கூடாது.

குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, தலைக்கு குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கிவிடும்.

கொசுக்கள் மூலமாக டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும், இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் தேங்கியிருக்கும் நீர்நிலைகளிலிருந்தே பெரும்பாலும் உருவாகின்றன.

காய்ச்சல், சளி, சோர்வு, அசதி போன்ற அறிகுறிகள் தென்பட்டாலே உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை பெறுவது அவசியம். கொசுக்களை தடுக்க முதலில் வீட்டை சுற்றிலும் நீர் தேக்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் தேவையில்லாமல் தண்ணீர் நிரப்பி வைப்பதை தவிருங்கள். தேவைப்படும்பட்சத்தில் அவற்றை நன்கு மூடி வையுங்கள். வீட்டை சுற்றி சாக்கடைகள் இருந்தால் வீட்டின் ஜன்னல், கதவுகளில் கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.

வீட்டில் குப்பைகளை சேர்க்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திவிடுங்கள். இதன்பின்னர், குழந்தைகளின் கை, கால் என உடலை முற்றிலும் மூடும் ஆடைகளை அணிந்துவிடுங்கள்.

வீட்டு கதவு, ஜன்னல்களை மாலையில் மூடி வையுங்கள். அடிக்கடி கதவுகளை திறந்து மூடாமல் இருங்கள். காலை நேரத்தில் காற்று வந்து செல்லுமாறு காற்றோட்டாமாக திறந்து வையுங்கள். குழந்தைகளுக்கு கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.

Related posts

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும் தெரியுமா!!

nathan

மது அருந்திவிட்டு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா திரிபலா பொடியை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

nathan

ஜலதோஷம், சளி, காய்ச்சல் என பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள

nathan

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் போனுக்கு அடிமையாகும் பிள்ளைகள்

nathan

உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 5 ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள்…

nathan

வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

பாத்ரூம் கற்களின் கறையை நீக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan