தூங்கி எழுந்ததும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க நாம் அன்றாடம் காலையில் கடைபிடிக்க வேண்டிய 3 செயல்களைப் பற்றி பார்ப்போம்.
காலையில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?
- வெளியே செல்லும் முன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடித்து செல்ல வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.
- தினமும் காலையில் பெற்றோரின் காலில் விழுந்து வணங்க வேண்டும். ஏனெனில் அது நமது உடம்பில் உள்ள ஆற்றல் அலைகள் தலையில் இருந்து பாதம் மற்றும் முதுகு நோக்கி பாயும். எனவே பெற்றோரின் பாதங்களைத் தொடும் போது, அவர்களின் ஆற்றலையும் பெறுவதுடன், பித்ர தோஷமும் நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
- காலையில் எழுந்ததும் இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தைத் துடைத்து, உள்ளங்கையில் முத்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில் கை விரல் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மாவும் இருப்பதால், இந்த செயலை அதிகாலையில் எழுந்ததும் செய்தால், அதிர்ஷ்டம் தேடி வருமாம்.
காலையில் செய்யக் கூடாத செயல்கள் என்ன?
- வாஸ்துவின் படி, படுக்கை அறையில் உள்ள கண்ணாடி மெத்தையைப் பார்த்தவாறு இருந்தால், அது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- மேலும் அது தம்பதிகளிடையே பிரச்சனைகளை அதிகரித்து, பிரிவை உண்டாக்கும். எனவே படுக்கை அறையில் உள்ள கண்ணாடிகளை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும்.
- மெத்தைக்கு எதிரே கண்ணாடி இருந்தால், அது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
குறிப்பு
- ஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் இந்த 3 செயல்களை செய்து வந்தால், வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைப்பதுடன், மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.