இன்றுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சிறுநீரக பிரச்சனையானது ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
சிலர் தனது இல்லத்தில் இருக்கும் கழிவறையை உபயோகம் செய்ய விரும்புவது வழக்கம். மேலும்., பொது இடங்களுக்கு சென்று வரும் நேரத்தில் சிறுநீரை அடக்காமல் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பிற்காலங்களில் சிறுநீரக பிரச்சனையானது ஏற்படுகிறது. மேலும்., சிலருக்கு வேலைப்பளுவின் காரணமாக சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவித்து வருகின்றனர். மேலும்., தூக்கத்தில் இருக்கும் போது கழிவறைக்கு எழுந்து செல்ல சோம்பேறித்தனபட்டு சிறுநீரை அடக்கி வைக்கின்றனர்.
மேலும்., தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கோளாறு மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு வழிவகை செய்கிறது. சிறுநீரை அடக்கினால் சிறுநீரக கற்கள் பிரச்சனையானது முதலில் ஏற்படும்.
பின்னர் சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து அதிகமான வலியை ஏற்படுத்தும். சிறுநீரகத்தை தொடர்ந்து வெளியேற்ற இயலாத பட்சத்த்தில் சிறுநீரகப்பை விரிவடைந்து., சிறுநீரக சதைகள் விரிவடைகிறது. இதனால் சிறுநீரக பையானது முற்றிலும் சேதமடையும்.