ஆரோக்கியம் குறிப்புகள்

அலட்சியம் வேண்டாம்….எந்நேரமும் காதில் ஹெட்செட் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்தே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுற்றுப்புறத்தை மறந்துவிடுகிறார்கள். அதிலும் இரவு முழுவதும் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டுகேட்டால் உலகமே மறந்துதான் போகிறது. இதனால், இளவயதினர் நாள் முழுக்க ஹெட் ஃபோன் பயன்படுத்திவருவதை கண்கூடாகவே பார்க்கிறோம்.

இது குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டிய பெரியவர்களும் உடன் சேர்ந்து ஹெட் ஃபோன் பயன்படுத்தும் போது இதன் விளைவை ஆபத்துக்கு பிறகே அறிந்துகொள்கிறோம். ஹெட் ஃபோனை பயன்படுத்துவதால் அது காது, கண் மற்றும் மூளை மூன்றிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.

செல்ஃபோன் பேசும் போது அழைப்புகளின் போது ரேடியோ ஃப்ரீக்வன்ஸி எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளிப்படும். இது அதிகளவு பாதிப்பை உண்டாக்கும். இது மூளை வரை சென்று பாதிப்பை உண்டாக்க கூடியது. இதிலும் அவர்கள் பயன்படுத்தும் நேரம் பொறுத்து அதன் வீரியம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.

மேலும், அதிகமாக ஹெட்செட் பயன்படுத்துபவர்கள் காதில் இரைச்சல் உணர்வதை அறிகின்றனர். ஹெட்ஃபோன் பயன்படுத்துவதை அளவாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல காரணமே இரவு நேரங்களில் பலரும் செய்யும் தவறு பாடல்களை கேட்டுகொண்டே தூங்குவதுதான். நமது காதுகள் மூன்று பகுதிகளால் ஆனவை இது ஒலிகளை செயலாக்கும் வேலைகளை செய்பவை.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வெளிப்புறம் காது, நடுத்தர காது மற்றும் உள்காது போன்றவை ஆகும். உள்காது கோக்லியா என்று அழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதி சிறிய முடி செல்களை கொண்டிருக்கிறது. இந்த மயிர் செல்கள் மூளைக்கு ஒலி செய்திகளை அனுப்ப உதவுகிறது. செய்திகள் சத்தம் அதிகமாக உரக்க இருக்கும் போது அது முடி செல்களை சேதப்படுத்திவிடக்கூடும்.

இதனால் செய்திகளை மூளைக்கும் அனுப்பும் கோக்லியா செயல்பட முடியாமல் போகிறது. என்ன செய்யவண்டும் அதிக சத்தம் மிகுந்த இடங்களில் இயன்றவரை ஹெட் ஃபோன் பயன்படுத்த கூடாது. அதே நேரம் அந்த மாதிரியான இடங்களில் அதிக நேரம் இருக்கவும் கூடாது.

குறிப்பாக இரவு நேர விடுதிகள், பார்களில் அதிக நேரம் தங்க கூடாது. இங்கு அதிக சத்தத்தை தொடர்ந்து உள்வாங்குவது கூட செவிப்பறையை பாதிக்க செய்யும்.

இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஹெட் ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரே ஹெட் ஃபோனை பலரும் பயன்படுத்துவது தவறு. இதனால் காது சார்ந்த தொற்று நோய்கள் தாக்க கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button