கோபப்படாத மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. இருந்தாலும் அதுவும் ஒரு அளவிற்கு தான் அல்லவா?
அளவிற்கு மீறி கோபப்படுபவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் பிரச்னை இருக்க தான் செய்யும். அதிகமான கோபம், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளையும் உடன் அழைத்து வந்துவிடும் என்பதை மறவாதீர்கள்.
அதுமட்டுமல்லாது, அறிவியல் என்ன கூறுகிறது என்றால், அதிகமாக கோபப்படுபவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுமாம். ஒருவேளை நீங்கள், அதிகமாக கோபப்படுபவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
அதிகமான கோபம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்
பொதுவாக ஒருவர் அதிகமான கோபத்திற்கு ஆளாகிறார் என்றால் அவரை பார்த்தாலே கண்டுபிடித்து விடலாம். முகம் மற்றும் கண் சிவப்பது, உடல் நடுக்கம், வியர்வை உள்ளிட்டவை ஏற்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும் அட்ரினலின், சி.எச்.ஆர் மற்றும் கார்டிசோல் போன்ற சில வேதிப்பொருட்கள் அல்லது ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. அதிகமான கோபத்தால் மூளை இந்த ஹார்மோன்களை வெளியிடும் போது உடல் அதிகப்படியான ஆற்றலை பெறுவதாலும், உடலில் அதிகமான இரத்த ஓட்டத்தாலும், இதுப்போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது.
பசி கோபத்தை அதிகரிக்கும்
கோபத்தை தூண்டும் காரணிகள் அடங்கியதும், உடலில் உள்ள அட்ரினலின் ஹார்மோன் குறையத் தொடங்கும், அதுவும் கார்டிசோல் ஹார்மோனால் தான். அத்தகைய கார்டிசோல் ஹார்மோன், கோபத்தை ஆற்றல் முழுவதுமாக வெளியேறி பின்பு வயிற்று பசியை தூண்டச் செய்யும். இதனால் தான், கோபப்படும் போதும், வருத்தப்படும் போதும் அதிகமான பசி ஏற்படுகிறது. அதிகமான கோபம் புரிந்துணர்வையும், சிந்தனை திறனையும் குறைப்பதால் தான் பசி ஏற்படுகிறது. இது ஆரோக்கியமானது இல்லை என்றாலும், உடல் அமைதி அடைகிறது.
வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு சேகரிக்கப்படும்
அதிகப்படியான கோபம், வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பை அதிகமாக சேகரிக்கும். இதற்கு காரணம், கோபத்தால் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன் உடலின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை தடுத்துவிடும். இதனால் தான், கோபப்பட்ட பிறகு சாப்பிடும் உணவு முழுவதுமாக ஆற்றலாக மாறாமல் வெறும் கோபத்தை தணிக்கும் பொருளாக மட்டுமே அமைந்துவிடுகிறது.
கோபத்தால் உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் போது எதையும் யோசிக்க முடியாது. அதனால் தான், கோபம் தணிந்த பிறகு சிலவற்றை மட்டும் மறக்காமல் செய்தால் உடல் எடை கூடுவதை சுலபமாக தடுத்துவிடலாம்.
தண்ணீர்
கோபம் ஏற்பட்டவுடன் உடனடியாக ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடியுங்கள். இது கோபத்தை குறைப்பதோடு, கோபத்தால் ஏற்படக்கூடிய பசியையும் தடுத்துவிடும்.
கலோரி குறைவான தீனி
கோபத்திற்கு பிறகு பசி ஏற்பட்டால், ஆரோக்கியமற்ற நொறுக்கி தீனியை சாப்பிடுவதை தவிர்த்து, கலோரிகள் குறைந்த எதையாவது சாப்பிடுவது சிறந்தது. இதனால், தேவையற்ற கொழுப்பு சேர்வதை தவிர்த்திடலாம்.
மூச்சு பயிற்சி
கோபம் வந்தால் உடனே ஒரு ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, 2 நிமிடங்கள் கண்களை மூடி கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் தனிமையாக உட்கார்ந்தோ, நின்றோ விடவும். இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.