31.9 C
Chennai
Friday, May 31, 2024
mage
ஆரோக்கியம் குறிப்புகள்

இப்படி செய்தால் சீக்கிரமா குறையும்? இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க!

தொப்பையில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையில் உருவாகும் தொப்பையை, அதற்கேற்ப குறைக்கலாம்.

கீழே தொப்பையின் வகைகளும், அவற்றைக் குறைக்கும் வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு எந்த வகையான தொப்பை உள்ளது என்பதை அறிந்து, அதைக் குறைக்கும் வழிகளைப் பின்பற்றி சிக்கென்று மாறுங்கள்.

01-மன அழுத்தத்தால் ஏற்படும் தொப்பை

ஒருவருக்கு அதிகப்படியான மன அழுத்தம் இருந்தால், அது தொப்பையை வரவைக்கும். எப்படியெனில் மனதளவில் ஒருவர் அதிகளவு அழுத்தத்தை சந்திக்கும் போது, உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது.

இதன் விளைவாக அது அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கத்திற்கு வழிவகுத்து, உடல் பருமனுடன், வேறு பல பாதிப்புக்களையும் ஏற்படுத்துகிறது.

இதைக் குறைப்பது எப்படி?

மன அழுத்தத்தால் ஏற்படும் தொப்பையைக் குறைக்க, தியானம், யோகா போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் மற்றும் மனக் கவலை அளவு குறையும். இது தவிர, போதுமான அளவு தூக்கத்தை மேற்கொண்டால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

02-ஹார்மோன் தொப்பை

ஹார்மோன் தொப்பை என்பது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுவதாகும். ஹைப்பர் தைராய்டிசம் முதல் பி.சி.ஓஎஸ் வரை, பல ஹார்மோன் மாற்றங்கள் எடை அதிகரிப்பிற்கு வழிவகுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து தொப்பையை உண்டாக்கும்.

இதைக் குறைப்பது எப்படி?

ஹார்மோன் தொப்பையைக் குறைப்பதற்கான ஒரே சிறந்த வழி, ஹார்மோன் நல்லிணக்கத்தைப் பேணுவது தான். ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த அவகேடோ, நட்ஸ் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

அதோடு, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொண்டு, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். முக்கியமாக ஹார்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்த கடினமாக இருந்தால், மருத்துவரை அணுக தாமதிக்கக்கூடாது.

03-கீழ் வயிற்று தொப்பை

ஒருவரின் மேல் உடல் அடிவயிற்றுப் பகுதியை விட மெலிதாக இருக்கும் போது, அது கீழ் வயிற்று தொப்பை என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த மாதிரியான தொப்பை உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை அல்லது செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் போது ஏற்படும்.

இதைக் குறைப்பது எப்படி?

கீழே வயிற்று தொப்பையை கொண்டிருப்பவர்கள், சிறந்த செரிமானத்திற்கு நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அதிக நீரைப் பருக வேண்டும் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதோடு அடிவயிற்று கொழுப்பைக் குறைக்கும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் அடிவயிற்றுப் பகுதி தொப்பையை விரைவில் குறைக்கலாம்.

04-வீங்கிய/உப்பிய வயிறு

வீங்கிய வயிறானது ஒருவருக்கு மோசமான உணவு அல்லது குறிப்பிட்ட உணவுகளின் சகிப்புத்தன்மையால் ஏற்படுகிறது. இந்த வகையான வயிற்றைக் கொண்டவர்கள், அசிடிட்டி மற்றும் அஜீரண கோளாறால் அடிக்கடி அவதிப்படுவார்கள்.

இதைக் குறைப்பது எப்படி?

வீங்கிய வயிற்றைக் குறைக்கும் சிறந்த வழி, தினமும் உடற்பயிற்சி செய்வது தான். வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். முக்கியமாக குளிரூட்டப்பட்ட பானங்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?

nathan

சலிப்பான உங்க திருமண வாழ்க்கைய சுவாரஸ்யமாக்க

nathan

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

விதைகளைப் பாதுகாப்பது என்பது உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முன் கூட்டிய நடவடிக்கை

sangika

இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

12ராசிக்கும் ஏற்படப்போகும் யோகம் என்ன?ஜூன் மாதத்தில் மாறும் கிரகங்களின் மாற்றம்…

nathan