29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
573296835
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்…!

பொதுவாக பெண்கள் ஆண்களை ஈர்க்க பெரிதாக முயற்சிகள் எதுவும் செய்யத் தேவையில்லை. பெண்களை விடவும் ஆண்கள் காதலில் விழுவதற்கு மிகவும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகிறது. பெண்களை நோக்கி ஆண்களை ஈர்க்கும் முதல் விஷயம் அழகுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆண்களின் அன்பை தக்கவைத்துக் கொள்ள அன்பு மட்டுமே போதாது என்பதுதான் உண்மை.

ஆண்களின் அன்பை சம்பாரிக்க பெண்களிடம் சில சிறப்பு குணங்களும் இருக்க வேண்டும். ஏனெனில் அழகைக் காட்டிலும் சிறப்பான குணத்தை தேடும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மற்ற பெண்களிடம் இருந்து விலகி தனித்துவமாக இருக்கும் பெண்களின் சில செயல்கள் ஆண்களை அவர்களை நோக்கி ஈர்க்கும். இந்த பதிவில் பெண்கள் செய்யும் ஆண்களால் தவிர்க்க முடியாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

முடியுடன் விளையாடுவது
பெண்கள் தங்கள் தலைமுடியுடன் விளையாடுவதை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதற்காக நாள் முழுவதும் நீங்கள் உங்கள் தலைமுடியை பிய்த்துக்கொண்டு இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. பெண்கள் பதட்டமாகவோ, கோபமாகவோ இருக்கும் போது தங்கள் தலைமுடியுடன் விளையாடுவது, சுற்றுவது போன்ற செயல்களை ஆண்கள் ரசிக்கிறார்கள். நீங்கள் அவர்களை நோக்கி திரும்பும்போது தலைமுடியை புரட்டும்போது அவர்கள் அதை விரும்புகிறார்கள். மேலும், காற்று உங்கள் முகத்தில் ஒரு சில இழைகளை வீசும்போது, ஆண்கள் அதை தவிர்க்க முடியாமல் திணறுவார்கள்.

கண்களை நேரடியாகப் பார்ப்பது
பெண்களின் கண்களைப் பார்த்து பேசுவது என்பது ஆண்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். இயற்கையாகவே பெண்களின் கண்களுக்கென ஒருவித காந்தசக்தி உள்ளது. பெண்களின் கண்கள் ஆண்களின் இதயத்தை உருகவைக்கும் தன்மை கொண்டது. தங்கள் கண்களைப் பார்த்து பேசுவதை ஆண்கள் விரும்புகிறார்கள்.

ரகசியமாக பார்ப்பது
ஆண்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தருணம் எது தெரியுமா? பெண்கள் அவர்களை ரகசியமாக பார்ப்பதை உணரும் தருணம்தான். நேசிக்கப்படுவதை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரும்புவார்கள். பெண்கள் தங்களை ரகசியமாக பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதை உணரும்போது ஆண்கள் தானாக பெண்களின் பால் ஈர்க்கப்படுவார்கள்.

உதடுளைக் கடிப்பது
ஒரு ஆணுடன் நீங்கள் பழகும்போது அவர்களின் கண்களை பார்த்து பேசும்போது உங்களின் உதடுகளை மென்மையாக கடித்து விட்டு ஆண்களின் எதிர்வினையை கவனித்துப் பாருங்கள். இது ஆண்களை மிகவும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும். இது ஆண்களின் பேச்சில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தும். இது உங்களை நோக்கி அவர்களை விழவைக்கும்.573296835

விளையாட்டுத்தனத்தை காண்பிப்பது
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை உங்களின் சின்ன சின்ன செயல்கள் மூலம் வெளிப்படுத்துவது ஆண்களை பெண்களை விரும்ப வைக்கும். எப்போதும் குழந்தைத்தனமாக இருப்பது ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், அவ்வப்பொழுதுதான் உங்களின் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். மனதளவில் குழந்தையாகவும், வாய்விட்டு சிரிக்கும் பெண்களையும் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். இது அவர்களை சிறப்பானவர்களாகக் காட்டும்.

உண்மையானவர்களாக இருப்பது
ஆண்களின் முன்னிலையில் ஓவராக சீன் போடும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆண்கள் தங்கள் தனித்துவத்துடன் இருக்கும் பெண்களை நேசிக்கிறார்கள், மேலும் அவர்களின் உண்மை முகத்தை மறைக்காத பெண்களே ஆண்களிடம் நன்மதிப்பை பெறுவார்கள். பெண்கள் யாரோ போல நடிப்பதில் வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது அவர்கள் தங்களின் மரியாதையை இழந்து விடுவார்கள்.

தன்னம்பிக்கை
பெண்கள் தங்களின் தன்னம்பிகையை வெளிப்படுத்தும் போது ஆண்கள் அதனை மிகவும் ரசிக்கிறார்கள். தங்களால் சரியான முடிவு எடுக்க முடியும் என்பதையும், தங்களை முழுமைப்படுத்த வேறொருவரின் துணை தேவையில்லை என்பதையும் இது உணர்த்தும். ஆண்கள் தன்னம்பிக்கை உள்ள பெண்களையே எப்பொழுதும் தங்களின் வாழ்க்கைத் துணையாக பெற விரும்புவார்கள். பெண்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமே அவர்களின் தன்னம்பிக்கைதான்.

 

 

Related posts

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நமது தினசரி செயல்பாடுகள்!!!

nathan

பச்சிளம் குழந்தைகளுக்கு வெங்காயம் இப்படி எல்லாம் பயன்படுத்தலாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 5 ராசிக்காரங்கள பணம் தேடி ஓடி வருமாம்…

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! சிசேரியன்ல குழந்தை பிறந்தும் நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பது இப்படித்தானாம்!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சமையல் டிப்ஸ்!

nathan

பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்.

nathan

நைட் நேரத்துல இதெல்லாம் பண்ணா உங்களுக்கு தூக்கமே வராது தெரியுமா?

nathan

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் அறிவுரைகள் என்ன…?

nathan