27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
trt
ஆரோக்கிய உணவு

இதை முயன்று பாருங்கள் பன்னீர் பிரைடு ரைஸ்

தேவையான பொருட்கள் :

பன்னீர் – ஒரு கப்

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 2 பல்

கேரட் – 1

பீன்ஸ் – 7

வெங்காயத்தாள் – கால் கப் (வெள்ளைப் பகுதி)

வெங்காயத்தாள் – அரை கப் (பச்சைப் பகுதி)

உப்பு, மிளகு – தேவையான அளவு

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
trt
செய்முறை :

பச்சை மிளகாய், பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள் இவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள்.

பின்னர் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள். இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும். இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து விடவும். இதனுடன் காரமான கிரேவியோடு வைத்து பரிமாறலாம்.

Related posts

அப்பிள் பழத்தை விட….. சிறந்தது வாழைப்பழம்……..!

nathan

சூப்பரான பசலைக்கீரை தோசை ரெசிபி

nathan

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

sangika

அரிசி தரும் அரிதான நன்மைகள்

nathan

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

nathan

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயாரிப்பது எப்படி?

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan