இருமல் சளி வரக் காரணங்கள் :
பெரும்பலான இருமல் சளி நோய்க்கான காரணம் வைரஸ் கிரமிகளாகும். சில நேரங்களில் பாக்டீரியா கிருமிகளால் சுவாச மண்டல நோய் ஏற்படலாம்.
குழந்தைக்கு அடிக்கடி தலையில் நீர் ஊற்றுவது காதுஇ மூக்கு போன்ற துவாரங்களில் எண்ணெய் ஊற்றுவதுஇ வாயில் கைவிட்டு சளி எடுப்பது போன்ற தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
மூக்கில் சளி அடைத்தால் சுத்தமான துணிக் கொண்டு மூக்கைச்சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல் சளி வராமல் தடுக்கும் முறைகள் :
குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது
போஷக்கான உணவுகளை அளிப்பது
தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த உதவ முடியும்.
குழந்தை இருக்குமிடத்தில் புகைப்பிடிக்ககூடாது. கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
இருமல் சளிநோய் உள்ள பெரியவர்கள் சுகாதார முறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.
காற்றோட்டம் இல்லாத ஜனநெருக்கடி உள்ள அறைகளில் இருப்பதன் மூலமும் இருமல் சளி நோய் வருவதற்கும் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.
இருமல் சளி நோய் கொண்டவர்கள் குழந்தைகளுடன் கொஞ்சக்கூடாது.