வெந்தயம், எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீரை குடித்தால் காய்ச்சல் குறையும். வெந்தயக் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும், பொடுகுத் தொல்லை நீங்கும்.
வெந்தயத்தை அரைத்துதோல் நோய், தீப்புண்கள், சீழ் பிடித்த கட்டிகள் ஆகியவற்றில் தேய்த்தால் குணமாகும். கருவுற்ற பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை உபயோகிக்க கூடாது. வயிற்றில் புண்கள், ரத்த ஒழுக்கு இருப்பின் வெந்தயம் சேர்க்க கூடாது. வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்தில் தடவி குளித்தால், மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் இது பயன்படுகிறது.