ஆரோக்கியம் குறிப்புகள்

தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் கடிப்பது பொதுவான ஒன்றாகும். ஆனால் ஒவ்வொரு குழந்தைகள் கடிப்பதற்கு பின்பும் மாறுபட்ட காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக பொதுவான காரணம் குழந்தைகளுக்குப் பல் முளைத்தல் ஆகும். ஒழுங்காக முறையில் தாய்ப்பால் கொடுக்கும் போது,

​​குழந்தையின் கீழ் கம் ரிட்ஜ் அல்லது பற்களை கொண்டு நாக்கால் மூடிக்கொள்ளுவார்கள். இதனால் மார்பகத்தைக் கடிக்க மாட்டார்கள். அப்படிக் கடிக்கும்போது அவர்களின் நாக்கும் காயப்படும். சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்கும் போது முலைக்காம்பு குழந்தையின் வாயில் ஆழமாகச் சென்று விடும் இதனால் அவர்களினால் மார்பகத்தைக் கடிக்க முடியாது.

ஆனால் குழந்தையை முறையான முறையில் பிடிக்காவிட்டால், அல்லது குழந்தை நாக்கினை சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் குழந்தைகள் முலைக்காம்பினைக் கடிக்கக் கூடும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பது போலக் குழந்தைகள் கடிப்பதற்குத் தீர்வு உள்ளது. சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகள் கடிப்பதைத் தவிர்க்க முடியும். முதலில் குழந்தைகள் எதற்காகக் கடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு உங்களுக்கான பிரச்சனை முடிந்து விட்டது என்றே கூறலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் கடிக்க நிறையக் காரணங்கள் உள்ளன. அதாவது தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை மார்பகத்தைக் சரியாகப் பிடித்துக் கொள்ளாமல் இருப்பது அல்லது குழந்தைகளை நீங்கள் முறையற்ற நிலையில் வைத்து பால் கொடுப்பது போன்ற காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் என்று பார்த்தால் குழந்தைகளின் பற்களே என்றே கூறலாம். குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது அதில் ஏற்படும் வலியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகத் தாயின் மார்பகத்தைக் கடிக்கிறார்கள். தாயின் மார்பகத்தைக் கடிக்கும் போது அவர்கள் பல் வலியிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.
9aef2f5205b6927c6d0
சற்று விவரம் தெரிந்த குழந்தைகள் விரைவில் திசை திருப்பப்படுவார்கள். அவர்கள் எதையாவது பார்க்கத் திரும்பினால், அல்லது தாயின் மார்பகம் தங்கள் வாயில் இருப்பதை மறந்து கடித்து விடுவார்கள்.

சில நேரங்களில் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பால் தாயின் மார்பகத்தில் கிடைக்காத போது முலைக்காம்பினைக் கடிக்கிறார்கள்.

குழந்தைகள் தூக்கத்தில் இருக்கும் போது தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் அறியாமையால் கடிக்க வழிகள் உண்டு. சில குழந்தைகள் பாசத்தின் அடையாளமாகக் கடிக்கிறார்கள் ஆனால் இது முலைக்காம்புக்கு எதிர்பாராத சேதத்தை ஏற்படுத்தும்.

பல் முளைத்த பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. அதாவது குழந்தைகளுக்குப் பால் பற்கள் வளரத் தொடங்கிய பிறகு பால்

கொடுப்பதை நிறுத்தி டப்பா பால் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் இது முற்றிலும் சரியான ஒன்று அல்ல. பால் பற்கள் வளர்ந்த பிறகு ஏன்

உணவளிக்கக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. குழந்தைகளைச் சரியான மற்றும் முறையான முறையில் வைத்து அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் எந்த வலியையும் உணர மாட்டீர்கள். குழந்தைகள் அவர்களின் ஈறுகளால் கடிக்கப்படும் போதும் பற்களால் கடிப்பது போலவே வலியை ஏற்படுத்தும். அதாவது குழந்தைகள் கடிக்கிறார்கள் என்பதற்காக உடனடியாக தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடாமல் சிறிது விடாமுயற்சி எடுத்து அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதற்கு உங்களுக்குச் சற்று விடாமுயற்சி மற்றும் பொறுமை தேவை.

எல்லா குழந்தைகளும் தாய்ப்பால் கொடுக்கும் போது கடிப்பது பொதுவான ஒன்று தான். தாய்மார்கள் இதனைச் சரி செய்யப் பின்பற்ற வேண்டிய சில வழிகள் உள்ளன.

குழந்தைகள் பால் குடித்து முடித்தவுடன் மற்றும் சலிப்பாக உணர்ந்த பிறகு கடிக்க ஆரமிப்பார்கள். எனவே குழந்தைகள் கடிக்க ஆரமித்த பிறகு உடனடியாக பால் கொடுப்பதை நிறுத்துங்கள்.

தாய்மார்கள் தங்கள் குழந்தையைச் சரியான முறையில் வைத்து பால் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையைச் சரியான முறையில் வைக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்து மார்பகத்தைக் கடிக்கிறார்கள்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது அவர்களுக்கு ஏதேனும் கவனச்சிதறல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கவனச்சிதறல்கள் ஏற்படும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மறந்து, மார்பகத்தைக் கடிக்கிறார்கள்.

உங்கள் மார்பகத்தைக் கடிக்கக் கூடாது என்பதைக் குழந்தைக்குச் சொல்ல முயற்சியுங்கள். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது ஒரு கதை அல்லது பாடலை பாடுங்கள். அவர்கள் மார்பகத்தைக் கடிக்கும் போது கடிக்கக் கூடாது என்று சொல்லுங்கள்.

உங்கள் மார்பகத்தில் இருக்கும் பால் இறுகிவிட்டால் அதனை வெளியே எடுக்கக் குழந்தைகள் சிரமப்படுவார்கள். எனவே குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு முன்பு சிறிது பால் வெளியேற்றி விட்டு பின்னர் கொடுங்கள்.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் பற்களும் ஒன்றாகும். இந்த நேரத்தில், குழந்தையின் ஈறு அரிப்பு மற்றும் வலிகள் மற்றும் நமைச்சலைக் கொண்டிருக்கும். இந்த வலிகளைக் குறைக்க மார்பகத்தைக் கடிக்கிறார்கள். எனவே இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கக் குழந்தையின் ஈறுகளை விரல்களைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.

குழந்தைகள் கடிக்கும்போது உடனடியாக அவர்களை வெளியே எடுத்து கீழே படுக்க வைத்து விடுங்கள். அப்போது கடிப்பது தவறு என்று உணருவார்கள்.

குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது மட்டும் தாய்ப்பால் கொடுப்பதால் அவர்கள் கடிப்பதைத் தடுக்க உதவும். ஏனெனில் பசியுடன் இருக்கும் போது பால் உறிஞ்சுவதில் கவனம் செலுத்துவார்கள். மார்பகத்தைக் கடிக்க மாட்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button