31.7 C
Chennai
Sunday, May 18, 2025
​பொதுவானவை

பெண்கள் ஆண் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்லும் போது கவனம் தேவை

 

பெண்கள் ஆண் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்லும் போது கவனம் தேவை பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும் போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம். பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன்கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண்கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்து தான் பிரச்சினையைக் கண்டறிய முடியும். இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும்.

அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும். சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம்.

அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan

ஆப்பிள் ரசம்

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

nathan

இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்

nathan

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவை சமாளிக்க வழிகள்

nathan

சுவையான உருளை கிழங்கு பொரியல்

nathan

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்கு

nathan