இளம் வயதினர் மட்டுமல்ல நடுத்தர வயதினர், முதியோரும்கூட தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடல் பருமன்
இவர்களெல்லாம், தங்கள் உறவினர் வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், விருந்துகளில் பங்கேற்கும்போது `கொஞ்சம் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று உறவினர் சொன்னால் `நான் டயட்டில் இருக்கிறேன்… நெய் சேர்த்தால் உடல் பருமனாகிவிடும், எனக்கு வேண்டாம்’ என்று மறுப்பார்கள்.
உண்மையில் உணவில் நெய் சேர்த்துக்கொண்டால் உடல் பருமன் ஏற்படுமா?
`நெய் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படாது’ என்கிறது ஆயுர்வேத மருத்துவம். அதை எப்போது சாப்பிட்டால் உடல் பருமன் ஆகாது என்பதை அறிந்துகொள்வது முக்கியம். நெய் ஒரு மிகச் சிறந்த உணவு மட்டுமல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.
ஞாபகசக்தி
பித்தத்தைக் குறைக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு. அதுமட்டுமல்ல, செரிமானத்துக்கும் ஏற்றது, ஞாபகசக்தியை அதிகரிக்கக்கூடியது, புத்திக்கூர்மைக்கு உகந்தது.
`சூரியன் உச்சத்தில் இருக்கும்போது, அதாவது பித்தகாலத்தில் மட்டுமே நெய் உட்கொள்ள வேண்டும். பித்தகாலம் என்பது மதிய வேளை. அப்போதுதான் உணவில் நெய்யைக் கலந்து சாப்பிட வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது ஆயுர்வேதம்.
நெய்
பசு மாட்டிலிருந்து கறந்த பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த நெய்யில் கலப்படங்கள் உள்ளனவா, சுத்தமானதா என்பதுபோன்ற தகவல்கலை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
இளஞ்சூடான உணவுகளில் மட்டுமே நெய்யைக் கலந்து சாப்பிட வேண்டும். அதைத் தவிர்த்து காலையில் பொங்கல், காலை மற்றும் இரவில் தோசை, மசால்தோசைகளில் நெய் சேர்த்து உண்ணக்கூடாது. அதேபோல எருமை மாட்டுப் பாலில் தயாரித்த நெய்யைத் தவிர்ப்பதே நல்லது.
செரிமானப் பிரச்னை
ஏனென்றால், இதில் கொழுப்புச்சத்து அதிகம். சுத்தமான பசு நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படாது என்பதை உணர்ந்து, நெய் உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.