26.6 C
Chennai
Sunday, Dec 29, 2024
625.0.560.350.160.300
ஆரோக்கிய உணவு

இதோ அற்புதமான எளிய தீர்வு!கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த பீட்ரூட் சூப்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகின்றது.

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

இந்நிலையில் கல்லீரலுக்கு சிறந்த பீட்ரூட் சூப் செய்யும் முறையை தற்போது இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1/4 கிலோ
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 25 கிராம்
மிளகுத்தூள் – தேவையான அளவு
கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோளா மாவு – 2 டீஸ்பூன்
கிரீம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்

செய்முறை

பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோளா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசாலா தூள், வெண்ணெய் சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்கும் போது அத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.

பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.625.0.560.350.160.300

Related posts

இனியும் தவிர்க்காதீர்கள்! உலர் திராட்சையில் இப்படி ஒரு அதிசயம் இருக்கா?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்!

nathan

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? தொடர்ந்து படியுங்கள்

nathan

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

nathan

கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

உருளைக் கிழங்கின் மகத்துவம்

nathan

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

nathan