ஆரோக்கிய உணவு

அடிக்கடி முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

முருங்கைக்காய் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட! தமிழர்களின் உணவில் மிக முக்கியமான காய்கறி என்றால் அது முருங்கைக்காய் தான்.

முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கைக்காய் மற்றும் இலைகளில், செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவும்.

முருங்கைக்காயின் இலைகள் மற்றும் பூக்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இவை தொண்டை மற்றும் சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும்.

 

முருங்கையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

முருங்கைக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதனை உட்கொண்டால், பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

 

முருங்கைக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்ட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முருங்கைக்காயில் உள்ள பினோலிக் மூலக்கூறுகளான குவாட்டசின் மற்றும் காம்பெஃபெரால் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடியது. நியாமிஸின் என்னும் இதில் உள்ள ஒரு பொருள் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது

பக்கவிளைவுகள்

அதிக நார்ச்சத்து ஆபத்தானது. முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான். அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள் உண்டாகலாம்.

முருங்கைக்காய் என்னதான் ஆரோக்கியமான காயாக இருந்தாலும் அது சிலருக்கு ஏற்றதாக இருக்காது. ஏனெனில் இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

 

ஹைப்போடென்ஷன் என்பது இரத்த அழுத்தத்தை மிக அதிகளவில் உயர்த்தும் ஒரு குறைபாடு ஆகும். இதனால் உலகம் முழுவதும் பலரும் பாதிக்கப்ட்டுள்ளனர். ஹைப்போடென்ஷன் இதய ஆரோக்கியத்தை பாதித்து மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். முருங்கைக்காய் ஹைப்போடென்ஷன் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். ஆனால் இதில் உள்ள பாதிப்பு என்னவென்றால் மிக அதிக அளவில் குறைக்கும். அதனால் மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

 

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்ளலை அதிகரிப்பதில் உதவக்கூடிய பரந்த அளவிலான உணவுகள்..!!!

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் நன்மைகள்

nathan

காராமணி சாண்ட்விச்! செய்து பாருங்கள்…

nathan

மீன் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான பட்டாணி பச்சை பயிறு அடை

nathan

ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர் -தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

சமையலுக்கு சூரிய காந்தி எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாமா?

nathan

உயிருக்கே ஆபத்து! தப்பித்தவறி கூட அகத்தி கீரையை இப்படி சாப்பிடாதீங்க!…

nathan