625.0.560.350.160 2
மருத்துவ குறிப்பு

நீங்கள் 30 வயதை தொடும் ஆண்களா ? அப்ப இத படிங்க!

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது.

மேலும் முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நடைபயிற்சி

தினமும் உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்களுக்கு முப்பது வயதை தாண்டும் போது எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம்.

புற்றுநோய்

புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க பகுதியில் சுரக்கும் ஓர் சுரப்பி. முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தம்

குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனநிலையில் சமநிலையின்மை ஏற்படலாம். எனவே அதனை குறைக்க தினமும் யோகா செய்து வந்தால் அது உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும்.625.0.560.350.160 2

உடல் எடை அதிகரிப்பு

ஆண்கள் முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
உணவு முறை

நமது உணவு மற்றும் வேலை முறை மாற்றத்தினால் உடல் வலிமை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்கள் தங்கள் உடல் வலிமை குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

உலக அளவில் 15 முதல் 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்துவிடமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் உடலில் ஏதேனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

Related posts

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஜோடிகள் கவனிக்க வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை!

nathan

உங்களுக்கு தெரியுமா அம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி!

nathan

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

nathan

தெரிஞ்சிக்கங்க…புத்தாண்டிலிருந்து நோயின்றி வாழ வேண்டுமா?

nathan

ஆல்கஹாலில் வயாகரா கலந்து குடித்தால் என்னவாகும் என்று தெரியுமா? சீனர்களை கேளுங்கள்!!!

nathan

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்

nathan

உங்கள் மனைவியின் டென்ஷன் குறைக்கும் ‘இரண்டு மந்திரங்கள்’ என்ன தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் அடிக்கடி மலம் வெளியேறுவது சாதாரணமானதுதானா?

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika