26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
566uhjhhg
ஆரோக்கிய உணவு

பச்சை பயறு அதிக சத்துக்கள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். ..

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது.

உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும்.

வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும்.

பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறிய பின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.

2 ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு பெறும்.

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.
566uhjhhg
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க… எடை சும்மா விறுவிறுனு குறையும்

nathan

மூளையை சீராக்கும் மூக்கிரட்டை கீரையை பற்றி தெரிந்து கொள்வோமா?

nathan

ஹைதராபாத் கோழி வறுவல் செய்முறை!

nathan

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு !

nathan

சூப்பர் சத்து… சிறுதானியப் பால்!

nathan

உங்களுக்கு எலுமிச்சம் பழத்தின் முழுமையான மருத்துவப் பயன்கள் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

டயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்!

nathan