29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
12 1442046723 4fivefoodsyoushouldnoteatinyourlifetime
ஆரோக்கிய உணவு

தப்பி தவறியும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் சாப்பிட்டுவிடக் கூடாத ஐந்து உணவுகள்!!!

நமது உணவுப் பழக்க கலாச்சார மாற்றத்தினால் தான் மக்கள் மத்தியில் நீரிழிவு நோய், உடல் பருமன், இதயக் கோளாறுகள் போன்றவை அதிகமாக காரணம். ஏதோ, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது போல நீரிழிவு ஏற்பட்டிருக்கிறது என மக்கள் கூறுவது சோகமான உண்மை.

இதை சிலர் பேஷனாக கருதுகிறார்கள். ஏன் இவ்வளவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது? இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி திடீரென இது பூதாகரமாக எழும்புகிறது? போன்ற கேள்விகள் நமது மனதில் எழாமல் போனதே வருத்தத்திற்குரியது தான்…..

செயற்கை சர்க்கரை
செயற்கை இனிப்பூட்டிகள் எனப்படும் செயற்கை சர்க்கரையின் காரணமாக தான், இன்று நிறைய நீரிழிவு, உடல்பருமன் போன்ற உடல்நல குறைப்பாடு ஏற்படுகிறது. நாம் சாப்பிடும், அனைத்து குளிர்பானங்கள், சாக்லேட், பெரும்பாலான பிஸ்கட்டுகள் போன்றவற்றில் இது சேர்க்கப்படுகிறது.

செயற்கை வெண்ணெய்
செயற்கை வெண்ணெய் என்பது மாற்று கொழுப்புச்சத்து கொண்ட வெண்ணெய் ஆகும். இது உடல்நலனுக்கு நல்லது என்று கூறி விற்கப்படுகிறது. ஆனால், இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல் கொழுப்பை அதிகரிப்பதாய் கூறப்படுகிறது.

பதப்படுத்தி விற்கப்படும் உணவுகள்
இன்று நாம் கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் உணவுகளை தான் நம்பி வாங்குகிறோம். ஆனால், அங்கிருந்து தான் நமது உடலுக்கு தீமைகள் நிறைய பரவுகின்றன. முக்கியமாக பதப்படுத்தி விற்கப்படும் உணவுகள். இதனால், நீரிழிவு, இதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பதிப்புகள் ஏற்படுகின்றன.

இன்று நாம் கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் உணவுகளை தான் நம்பி வாங்குகிறோம். ஆனால், அங்கிருந்து தான் நமது உடலுக்கு தீமைகள் நிறைய பரவுகின்றன. முக்கியமாக பதப்படுத்தி விற்கப்படும் உணவுகள். இதனால், நீரிழிவு, இதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பதிப்புகள் ஏற்படுகின்றன.
வறுக்கப்பட்ட உணவுகளின் காரணமாக உடலில் தீயக் கொழுப்புச்சத்து, உடல் எடை அதிகரிப்பு, இதய பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, வேக வைத்து உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள.

சோடா பானங்கள் நாம் இன்று விரும்பி பருகும் பானம் சோடா பானங்கள். அதிகமாக சாப்பிட்டால், பார்ட்டி, மது என அனைத்திலும் சோடா பானங்களை சேர்த்துக் கொண்டு வருகிறோம். மக்கள் மத்தியில் அதிகமாகி வரும் நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சோடா பானங்கள் ஓர் பெரும் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

12 1442046723 4fivefoodsyoushouldnoteatinyourlifetime

Related posts

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு

nathan

அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்

nathan

இந்த காய்கறிகள் உண்மையில் வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம் தெரியுமா?

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் அற்புதமான ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

அட்டகாசமான சுவை கொண்ட வெந்தயக் குழம்பு!!!

nathan

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

nathan

உங்களுக்கு தெரியுமா தண்ணீரைக் கொண்டு இவ்வளவு வியாதிகளைக் குணப்படுத்த முடியுமா??

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள்!!!

nathan

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பாதாம்…

nathan