ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா போலியான தேனை எப்படி கண்டறியலாம்?

போலிகள் எங்கும் எதிலும் இருக்கின்றன. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று நினைத்தால், அதிலும் போலிகள் வந்துவிட்டன.

எதிலும் கலப்படம் நிறைந்து காணப்படுகிறது. கலப்படம் செய்யப்படும் பொருட்களில் ஒன்று தேன். இந்த தேனில் உள்ள கலப்படத்தை எப்படி கண்டறிவது என்பது பற்றி காண்போம்

1. லேபிளை கவனமாக படியுங்கள் லேபிளை நீங்கள் கவனமாக படித்தால் அந்த பொருளில் எது எவ்வளவு கலந்துள்ளது என்பது தெரிந்துவிடும். ஒரு சரியான பொருளை வாங்குவதற்கு அதன் லேபிளை படிப்பது அவசியமாகும்.

2. எளிதில் உறிஞ்சும் தன்மை இது மிகவும் எளிதான வழிமுறை. சிறிதளவு தேனை உங்கள் விரல்களில் எடுத்து தேய்த்து பாருங்கள். உண்மையான தேன் எளிதில் சருமத்தில் உறிஞ்சப்படும். ஒருவேளை உங்கள் கையில் தேன் மீதம் இருந்தால், அது உண்மையான தேன் இல்லை. அதில் சக்கரை அல்லது செயற்கையாக சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

3. சூடு செய்தல் சிறிதளவு தேனை எடுத்து அடுப்பிலோ அல்லது ஒவனிலோ சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். நன்றாக சூடு செய்வது சிறந்தது. அடுப்பை அணைத்த பின்னர் சுத்தமானதாக இருந்தால் சில மணி நேரங்களானதும் பழைய அடர்த்தியை அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.

4. காகிதம் சிறிதளவு தேனை எடுத்து காகிதத்தின் மீது விடுங்கள். உண்மையான தேனுக்கு அடர்த்தி அதிகம். எனவே அது காகிதத்தால் உறிஞ்சப்படாது. போலியான தேனில் நீர் அதிகமாக இருக்கும் எனவே அது எளிதில் காகிதத்தால் உறிஞ்சப்பட்டுவிடும்.

5. தண்ணீர் மற்றும் தேன் சில துளிகள் தேனை தண்ணீரில் விட்டால், உண்மையான தேன் பாட்டிலின் அடிப்பகுதி வரை செல்லும். போலியான தேனில் நீர் அடங்கியிருப்பதால், அது பாதியிலேயே கரைந்துவிடும்.

6. தேன் மற்றும் ரொட்டி தேனை ரொட்டியின் மீது தடவினால், அது அடர்த்தியான படலமாக இருந்தால், அது உண்மையான தேன். அவ்வாறு இல்லையென்றால் அது போலியான தேன்.

7. கெட்டித்தன்மை உண்மையான தேனை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் அது கெட்டியாகவே தான் இருக்கும். ஆனால் போலியான தேன் அதன் நீர்விட தொடங்கிவிடும்.honey 41375415405

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button