சிலருக்கு அடிக்கடி சளி பிரச்னை துரத்துவதைப் பார்த்திருப்போம். சதா சர்வநேரமும் கைக்குட்டையை கையில் வைத்துக்கொண்டு சுற்றுவார்கள்.
அதிலும் பனிக்காலம் என்றால் அவர்களது நிலமை இன்னும் சிக்கலுக்குள் சென்றுவிடும்.
இவர்கள் சளி பிரச்னையில் இருந்து மீள்வதற்கு ஈஸியான எட்டு டிப்ஸ்கள் இங்கே…
ஒரு டம்ளர் அன்னாசி சாற்றோடு மிளகுத்தூள் சேர்த்து தினசரி குடித்து வந்தால் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கற்பூரவள்ளி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை அன்றாட பயன்பாட்டில் குடித்து வந்தாலும் சளித்தொல்லை போகும்.
இரவு தூங்கும் முன்னர் பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடித்தாலும் சளித்தொல்லை மட்டுப்படும்.
இதேபோல் வெற்றிலை சாறு எடுத்து, அதனோடு தேன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் போகும். கூடவே சளித்தொல்லையும் போய்விடும்.
இதேபோல் வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிட்டாலும் இருமல், சளி போய்விடும். மாட்டுப்பாலை நன்றாக கொதிக்க வைத்து அதனோடு தேன் கலந்து குடித்தாலும் சளியும், இருமலும் பறந்துவிடும்.
கொய்யாப் பழத்தை துண்டு, துண்டாக வெட்டி மிளகுத்தூள் தொட்டு சாப்பிட்டால் நுரையிலில் தேங்கியிருக்கும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
இதேபோல் ஆரஞ்சை ஜூஸாக பிழிந்து, தேன், ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடித்தால் சளி, இருமல் கூடவே தொண்டை வலியும் போய்விடும்.
முயற்சித்து பாருங்கள் நண்பர்களே…