15299364089bda8ed3c61a9e0e9081e623a743ebf6042102377356652140
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! காலையில் வெள்ளை பூசணி ஜுஸ் அருந்துங்கள்… ஆரோக்கியம் பெறலாம்!!!

ஆரோக்கியம் தரும் வெள்ளை பூசணி ஜுஸை காலையில் காபி, டீக்கு பதிலாக அருந்தி வாருங்கள். அருமையான மாற்றங்களை உணர்வீர்கள்.

வெள்ளைப் பூசணி உடலுக்கு பலவகையாக நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.

15299364089bda8ed3c61a9e0e9081e623a743ebf6042102377356652140

தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் வெள்ளைப்பூசணியில் உள்ள சத்துக்களானது நரம்புகள் மற்றும் மூளையை அமைதியடையச் செய்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வெள்ளை பூசணியை தினமும் காலையில் ஜூஸ் போட்டு காபிக்கு பதிலாக குடித்து வந்தால் என்னனென்ன நன்மைகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும். தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள் வெள்ளைப் பூசணி ஜூஸைக் குடித்து வந்தால், உடல் சூடு தணியும் மற்றும் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வெள்ளை பூசணி ஜூஸில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும்.

உடலின் உட்பகுதியில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டால், அதனை வெள்ளை பூசணி ஜூஸ் தடுக்கும்.

Related posts

சிறு தவறுகளால் சில நேரங்களில் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள்…

sangika

பாம்பு கடிக்கு மருந்தாகும் தவசு முருங்கை…!

nathan

உங்களுக்கு தெரியுமா 50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்

nathan

முயன்று பாருங்கள்..இதோ இயற்கைவைத்தியம்!!! குழந்தை பிறந்ததும் குண்டானவர்களுக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளி நகைகள் அணிவதால் உண்டாகும் ஆச்சரியமான நன்மைகள்!

nathan

சுய மசாஜ் செய்துகொள்ளலாமா? என்னென்ன என்று பார்க்கலாம்.

nathan

தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவரா? கண்டிப்பாக படியுங்கள்

nathan

முதுமையில் இளமை சாத்தியமா?தெரிந்துகொள்வோமா?

nathan

வியர்வை நாற்றமா? இதை செய்தால் நாள் முழுதும் ஃப்ரஷா இருப்பீங்க!!

nathan