30.9 C
Chennai
Monday, May 19, 2025
3.800.668.160.90 1
ஆரோக்கிய உணவு OG

சூப்பர் டிப்ஸ்!மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப் செய்வது எப்படி?

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்து.

பப்பாளியில் உள்ள நார்ச்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.

மலச்சிக்கலை போக்க பப்பாளி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான விஷயங்கள்

பப்பாளி – சிறியது (பாதி)
இஞ்சி – சிறு துண்டுகள்
வெங்காயம் – 1 துண்டு (நறுக்கியது)
காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப்
மிளகு – காரத்தைப் பொறுத்து
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கிரீம் – சிறிது
உப்பு – விரும்பினால்.

செய்முறை

பப்பாளி பழம், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி… சூப் கப்பில் ஊற்றவும்.

அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

Related posts

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை பழங்கள்

nathan

டிராகன் பழம்: நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள்

nathan

இயற்கை பி12 வைட்டமின் ஆதாரங்களுக்கான வழிகாட்டி

nathan

மண்ணீரல் பலம் பெற உணவுகள்

nathan

இந்த பிரச்சனை இருக்கிறதா?மறந்து கூட வாழைப்பழத்த சாப்பிடாதீங்க

nathan

சிறந்த மெக்னீசியம்: உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 10 உணவுகள்

nathan

பெக்கன் கொட்டைகள்: pecan nuts in tamil

nathan

மல்லி தண்ணீர் நன்மைகள்

nathan

எடை இழப்புக்கான உணவு திட்டம் – diet plan for weight loss in tamil

nathan