ஒயின் வகைகளை பொறுத்தவரை ரெட் ஒயின், வொயிட் ஒயின், க்ரீன் ஒயின்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவை தவிர்த்து மற்றொரு ஒயின் இப்போது அதிக பிரபலமடைந்து வருகிறது. அதுதான் ஆரஞ்சு ஒயின். இந்த பதிவில் ஆரஞ்சு ஒயினின் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா? ஆரஞ்சு ஒயின்
ஆரஞ்சு ஒயினை பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒயின் உலகத்தில் இது ஒரு புதுவரவாகும். மற்ற ஒயின்களை காட்டிலும் இது பல சிறப்புகளை கொண்டது. ஜார்ஜியா மற்றும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக ஆரஞ்சு ஒயின் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்துதான் இது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?
தயாரிக்கும் முறை
இதன் பெயரை கொண்டு இது ஆரஞ்சு பழத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்று நினைக்காதீர்கள். அனைத்து ஒயின்களுமே திராட்சையில் இருந்து மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது. இது வொய்ட் ஒயின், திராட்சை தோல் மற்றும் விதைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் ஆரஞ்சு நிறத்திற்காக செயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?
சுவை
ஆரஞ்சு ஒயினின் சுவையானது அதில் பயன்படுத்தப்படும் திராட்சையை பொறுத்தது. பெரும்பாலான ஆரஞ்சு ஒயின் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இது தயாரிக்கும் முறையானது கிட்டத்தட்ட ரெட் ஒயினை பொறுத்ததுதான். பல தாவர கலவைகளை சேர்ப்பதன் மூலம் இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?
ஆன்டி ஆக்சிடண்ட்கள்
கேம்ப்ஃபெரோல், குர்செடின், கேடசின்ஸ் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரஞ்சு ஒயினில் அதிகம் நிறைந்துள்ளது. ரெட் ஒயினை காட்டிலும் ஆரஞ்சு ஒயினில் இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இதற்கு காரணம் வெள்ளை திராட்சை சாறு, விதை மற்றும் தோல் சேர்த்து தயாரிக்கப்படுவதுதான்.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?
நன்மைகள்
இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இந்த நச்சு பொருட்கள்தான் நமது உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாகும். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்களை புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடும். தினமும் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஒயின் எடுத்துக் கொள்வது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். மிதமான அளவில் இதனை எடுத்துக் கொள்வது நல்லது ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது எதிர்மறை பாதிப்புக்ளை ஏற்படுத்தலாம்.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?
கெட்ட கொழுப்பு
உங்கள் உடலில் அதிக கெட்ட கொழுப்பு இருக்கிறதா அல்லது நீங்கள் டயட்டை சரியாக கடைபிடிப்பதில்லையா? கவலைப்படாதீர்கள் தினமும் கொஞ்சம் ஆரஞ்சு ஒயின் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் இருக்கும் பாலிபினால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும். மேலும் இதிலிருக்கும் ரிவெஸ்டெரோல் உங்கள் உடலில் HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதனை குடிப்பது நல்லது.
இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?
பக்க விளைவுகள்
ஆரஞ்சு ஒயின் குடிப்பது ஆயுளை அதிகரிக்கும். இத்தகு முக்கிய காரணம் இதிலிருக்கும் ரிவெஸ்டெரோல்தான். ஆனால் அதிகளவு எடுத்து கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒயினாக இருந்தாலும் அதுவும் மது வகையை சேர்ந்ததுதான். இதனை அதிகம் குடிக்கும் போது கல்லீரல் பிரச்சினை ஏற்படலாம். அது மட்டுமின்றி ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஒயினில் 120 கலோரிகள் இருக்கும். அளவிற்கு அதிகமாக குடிக்கும் போது அதனால் எடை அதிகரிப்பும், மேலும் சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.