ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் பெற்றோர்களே… இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்..!

குழந்தைகளின் வாழ்வில் சில காலத்திற்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் குழந்தைகளுக்கு பல வகையான பொம்மைகளை வாங்கி கொடுப்பார்கள்.

வயதிற்கு ஏற்றப்படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க…

ப்ளாஸ்டிக் பொம்மைகள், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ் உள்ள பொம்மைகள், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், இத்தகைய பொம்மைகளில் தரம் இருக்காது. இத்தகைய தரமற்ற பொம்மைகளை குழந்தைகள் வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.
fgdfg 1
குழந்தைகள் பேட்டரியை கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களை செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டு பொருட்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதாவது குழந்தைகள் நீங்கள் கவனிக்காத நேரத்தில் அவற்றை விழுங்கி விடலாம். இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்கள் அழகாய் இருப்பதை விட பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். விளையாட்டு பொருட்களின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாக படித்து, வயதிற்கேற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

எடை இல்லாத விளையாட்டு பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கலாம்.

ஸ்டிரிங், கயிறுகள் கொண்ட விளையாட்டு பொருட்களையும் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

எந்த பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம்?

0-6 மாத குழந்தைகள் :

பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம்.

சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம்.

7-12 மாத குழந்தைகள் :

இந்தப் பருவத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரக்கூடியவர்கள். உட்காருவது, தவழ்வது, நிற்பது, நடப்பது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.

இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம்.

குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் தன்மை கொண்ட விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

1 வயது குழந்தைகள் :

குழந்தைகளுக்கு செயல்முறை விளையாட்டுகளை கற்றுக்கொடுக்கலாம்.

படங்கள் இருக்கும் புத்தகங்கள் வாங்கி தரலாம்.

பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button