ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தேன் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி எடை இழப்பதற்கான 4 எளிய வழிகள்

health_002தேனும், எடை குறைக்கும் முறையும்:
நாம் எவ்வளவு கடின முயற்சி செய்தாலும் நம்மால் ஒரு நாளும் சர்க்கரையை தவிர்க்க முடியாது. எனவே, உங்களால் இனிப்பை தவிர்க்க முடியாத பட்சத்தில் நீங்கள் தேனை பயன்படுத்தி பின்வரும் நன்மைகளை பெற‌ முடியும்:

– நீங்கள் தேனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நாக்கிற்க்கு ஒரு இனிப்பு சுவையை குடுப்பதோடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கத்தையும், தேவையற்ற‌ கலோரியையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது.
– தேனான‌து சர்க்கரைக்கு ஒரு மாற்று வழியாகும், மேலும் இதில் 63% கலோரியை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
– தேனை சூடான நீரில் கலந்து காலை அருந்துவதால், நம் உடலில் உள்ள உணவு துகள்கள் செரிப்பதற்கு உதவுகிறது.
– தேன் மற்றும் – சூடான நீர் இந்த கலவையானது உங்கள் உடலில் இருந்து தேவையற்ற நச்சுகளை அகற்ற‌ உதவுகிறது.
– நீங்கள் இந்த கலவையை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க செய்வதோடு உங்களுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிப்பதை நீங்களே உணர்வீர்கள். .
தேன் மற்றும் சூடான நீர் கலவையை செய்வது எப்படி: .
நீங்கள் காலை எழுந்ததும் தேனை சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும்: .
1: தண்ணீரை நன்றாக 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் அதிக சூடாக இருக்கக்கூடாது.
2: சூடாக்கிய தண்ணீரை நன்கு வடிகட்டிக் கொள்ளவும். .
3: தேவையான அளவு 1 முதல் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். .
4: இதை நன்றாக கலக்கி குடிக்கவும். .
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது எப்படி? .
நீங்கள் தேனில் தண்ணீரைக் கலந்து சாப்பிடுவதன் மூலம் வேகமாக எடையை குறைக்கலாம். இது உங்கள் சிறுநீரகங்களில் உள்ள அதிகப்படியான‌ நீரை அகற்றுவதோடு, எடையையும் கணிசமாக‌ குறைக்கிறது.
நீங்கள் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்க சில எளிய வழி முறைகள்: .
நீங்கள் தேன் மற்றும் சூடான நீரைப் பருகும் போது அது உங்களுக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் செய்யும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் குறைவாக உணவு உட்கொள்ளவும், மேலும் இது எடை இழக்கவும் உதவுகிறது. தேன் மற்றும் சூடான நீரை கலந்து அதிகாலையில் குடிக்கும் போது வேகமாக எடை இழப்பதை நீங்களே உணர்வீர்கள். .
கொஞ்சம் மாற்றி தேன் மற்றும் சூடான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இன்னும் சிறந்த பலன்களை பெறலாம். எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரஸ் மற்றும் தேன் இனிப்புடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான‌ நலன்களை தந்து நம்மை ஒரு புத்துணர்ச்சியோடு வைக்கும் சிறந்த பானமாக இது விளங்குகிறது.
காலை உணவிற்கு முன், நீங்கள் தேன் கலந்த‌ சூடான தேநீர் ஒரு கப் அருந்தும் போது, அது உங்கள் பசியின்மையை மேம்படுத்துகிறது. மேலும் இது நீங்கள் நாள் முழுவதும் சர்க்கரை பாதிப்பு இல்லாமல் இருக்கவும் செய்கிறது.
மற்றொரு முறை, தேன் மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து, அதனுடன் இலவங்கப்பட்டை ஒரு தேக்கரண்டி சேர்த்தும் முயற்சிக்கலாம். இது எடை இழக்க மட்டுமல்லாது உங்கள் மூச்சு காற்றில் புதிய நறுமணத்தையும் தருகிறது.
தேனை பயன்படுத்தும் மற்ற வழிகள்: .
நமக்கு ஏற்கனவே தேனுடன் தண்ணீர் சேர்ப்பதன் மூலம் எடை இழக்கலாம் என்று தெரியும். எனினும், இங்கே தேனை பயன்படுத்த சில மாற்று வழிகள் உள்ளன: .
ஆப்பிளை துண்டுகளாக்கி அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால். அது உங்கள் உடல் ஆற்றலுக்கு தேவையான‌ நார்ச்ச‌த்தை அதிகரிக்க உதவுகிறது. .
நீங்கள் தினமும் வெளியே செல்வதற்கு முன் ஒரு ஆப்பிள் ஸ்லைஸ், மற்றும் தேன் ஒரு சில தேக்கரண்டி மற்றும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்தும் சாப்பிடலாம். .
நீங்கள் காலை அல்லது மாலை சிற்றுண்டியுடன் அக்ரனோலா மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் செய்யும் இவை அனைத்திலும் ஒரு கரண்டி எலுமிச்சை சாறும் சேர்த்துக்கொள்ளலாம், தயிரும் கலந்து கொள்ளலாம். இதை காலையில் சாப்பிடும் போது நீங்கள் வேகமாக எடை இழப்பீர்கள், மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
நீங்கள் எப்போதும் ஒரு பார்பிக்யூ அல்லது திறந்த தீ மீது சமைக்கப்படும் கோழி துண்டுகளுடன் தேன் சேர்ப்பதன் மூலம் அதை ருசியாக சுவைக்க முடியும். இந்த‌ சுவையை ஒரு குறைந்த கலோரியுள்ள கரமெலைஸ்டு கோழி கொடுக்கும்.
முன்னெச்சரிக்கை: .
வெதுவெதுப்பான நீரில் தேன் எடையை இழக்க திறமையாக செயல்படுகிறது, ஆனால் இதை பயன்படுத்தும் அதே நேரத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்: .
இதில் கார்போஹைட்ரேட் உள்ளதால் உடனடியாக உங்கள் இரத்ததில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கக்கும், எனவே நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரென்றால் இதை பயன்படுத்தக் கூடாது.
தேனில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. இதற்கு ஒரு மறுபக்கமும் உள்ளது. தேனை அதிக‌ அளவு உட்கொள்ளும் போது அதில் இருக்கும் கலோரிகளும் அதிகரிக்கின்றது. எனவே, நீங்கள் கலோரி உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த‌ தண்ணீரோடு சேர்த்து தேனை பருக வேண்டும். .
தண்ணீருடன் தேன் கலந்து பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் எடை இழப்பதற்கான‌ இலக்குகளை எளிதில் அடைய உதவும். தேன் எடை இழக்க உதவுவதால், அது உங்களுக்கு அதிக அளவு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, இதை கவனமாக கையாளவேண்டும். .
நீங்கள் உங்கள் உணவில் தேன் மற்றும் நீர் சேர்த்து பயன்படுத்திய பிறகு இழந்த‌ எடை எவ்வளவு என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களை விரைவில் நாங்கள் அழகான வடிவத்தில் சந்திக்க விரும்புகிறோம். .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button