28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
4a0c9d4e342fb9
ஆரோக்கியம் குறிப்புகள்

கவணம்! பூப்பு அடைதலை முன்கூட்டியே தூண்டும் நகப்பூச்சு!

விளையாடும் பருவத்தில் பூப்பெய்துவதனால் ஏற்படும் துன்பங்களையும், பெண் பிள்ளைகளின் மன உலைச்சலையும் சொல்லி மாளமுடியாது. ஏற்கனவே, வெளி விளையாட்டு என்றால் என்ன வென்றே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

அப்படியே மருத்துவரின் வற்புறுத்தலுக்காக விளையாட அனுப்பினாலும் எப்போது வயதிற்கு வந்துவிடுவாளோ? என்கிற பயத்தை அடி வயிற்றில் நெருப்பாய கட்டிகொள்ள வேண்டியிருக்கிறது.இந்த பயம் 15 வயது பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களிடம் இருந்தால் பராவாயில்லை.

ஆனால்காலக்கொடுமையாக 8 வயதுள்ள பெண் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கே இந்த பயம் பற்றிக்கொள்கிறது.

சற்றே சிறிது காலத்திற்கு முன்னதானகாலகட்டத்தில் – ஆண்டுகளில்பூப்பெய்தல் என்பது தன்னை தானே பார்த்துக்கொள்ளும் அளவிற்கு, பெண் பிள்ளையின் மனதிலும் உடலிலும் வலிமை பெற்ற பின்னரே நிகழும்.

ஆனால் தற்போது உடையை கூட சரியாக அணியத்தெரியாத சின்னஞ்சிறு பெண் குழந்தைகள்பூப்பெய்திவிடுகின்றனர். அப்போது 6 வயதில் பள்ளி சென்றோம் ஆனால், தற்போது இரண்டரை வயதில்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்.

அதிலும் கொடுமையாக தனிக்குடித்தின பெற்றோர்கள் தங்கள் குழந்தையை 6 மாதத்திலேயே டே கேரில் தள்ளிவிட்டு விடுகின்றனர். இப்படி எல்லாமே ஃபஸ்டாக நடக்கும் காலகட்டத்தில் பூப்பெய்தலும் விரைவாகத்தானே நடைபெறும் என்று அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. சரி இந்த அவலத்திற்கு என்ன காரணம்?

முன் கூட்டியே பூப்பெய்தும் நிகழ்வு இரண்டு நிலைகளினால் ஏற்படுகிறது. அவை பிட்யூட்டரி சுரப்பி சார்ந்து பூப்பெய்துதல், பிட்யூட்டரி சுரப்பி தொடர்பு இல்லாமல், நேரடியாக ஹார்மோன் தொந்தரவுகளால் பூப்பெய்துதல்என முன் கூட்டியே பூப்பெய்தும் நிலையைஇரண்டு வகையாக வகைப்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வகைகளை தெரிந்து கொண்டோம் இந்த சுரபியின் இயல்பு எப்படி கெடுக்கப்பட்டு முன்கூட்டியே பூப்பெய்துதல் நிகழ்கிறது எனப் பார்க்கலாம்..

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதைப் போல நமது உடல் இயக்கத்தில் என்ன தீய மாற்றம் நிகழ்ந்தாலும் அதற்கான முக்கிய காரணி நமது செயலாகத்தான் இருக்க முடியும், அதேபோல நமது குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளும் நாம் மேற்கொள்ளும் முறையற்ற வாழ்க்கை முறைகளால் தான் ஏற்படுகிறது. அந்த வகையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு பட்டியலை முதலில்ஆய்வு செய்வோம்.

பால்;

‘உடலுக்கு பலம் தரும் பால்’ என்னும் கருத்து மாறி வளர்சிதை மாற்றத்தில் தீங்கு விளைவிக்கும் பால் என ஆகிவிட்டது. கிராமப்புறங்களில் கன்று ஈன்ற பசு மாட்டின் பாலை, கன்று குடித்தது போக மீதத்தைகரந்து பயன்படுத்தி வந்தோம்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாகரிக ஓட்டத்தாலும், நகரமயமாக்கத்தாலும் மாடுகளை பண்ணையில் வளர்த்து விரைவில் முதிர்ச்சி அடைவதற்காக ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

அதோடு அதிக பால் சுரக்க மாடுகளுக்கு மருந்துகள் செலுத்துகின்றனர். இந்த மருந்துகள் செலுத்தப்பட்டு எடுக்கப்படும் பாலை அருந்தும் கர்பிணிகளின் கர்பம் கலைவது என்பது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

ஆனால் திடீரென கர்பம் கலைவதன் காரணம் நமக்குத் தெரிவிதில்லை. மனைவியிடம் தான் கோளாறு என்று நாம் தவறாக நினைத்து மருத்துரிடம் சென்று ஆலோசனை செய்கிறோம். அவர்களாலும் தெளிவான வழிகாட்டுதளை வழங்க இயலாமல் போகிறது, அதுமட்டுமின்றி கர்பம் தரிக்க வைப்பது என்பது ஒர் தொழிற்சாலையைப்போல் மருத்துவர்களால் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டுவருகிறதுஎன்பதே நடைமுறை உண்மை. இது ஒருபுறம் இருக்கட்டும்.

மேலும் மாடுகளிடம்இருக்கும் மொத்த பாலையும் இயந்திரம்கொண்டு உறிஞ்சி மொத்தமாக எடுத்து லாபம் பார்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளின் ஆயுள் மிகக்குறைவு.

மேலும் ரசாயன மருந்துகளை பாலை அதிகம் சுரக்க வைக்கும் ஊக்கமருந்துகளாக பயன்படுத்தும் நிலையில், அத்தகையபாலை குடிக்கும் நமக்கு என்ன நேரும்? இத்தகையபால் குடிக்கும் குழந்தைகளின் ஹர்மோன்கள் விரைவில் முதிர்ச்சியடைவதற்கு (பூப்பெய்துவதற்கு)இவை வழிவகுக்கின்றன, மற்றும் கர்பிணிகளின் கர்பம் கலைவதற்குஇத்தகைய ஊக்கமருத்து மூலம் பெரும் பாலும் காரணமாக அமைகின்றன என்பதே நடைமுறை உண்யாக உள்ளன.

பிராய்லர் கோழி :

இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் கோழிகள் அபரிமிதமாகவும், விரைவாகவும்வளர்ச்சி அடைவதற்காக, அவற்றுக்கு ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் போடப்படுகின்றன. இதை குழந்தைகள் அதிகமாக உண்ணும்போது அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென் இரு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் விரைவாக பூப்பெய்து விடுகின்றனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகளே பதப்படுத்தப்பட்ட உணவுகள். இத்தகைய உணவுகளை பாதுகாத்து வைத்திருப்பதற்கு ரசாயனங்கள் அவற்றில்கலக்கப்படுகின்றன.

நாகரிகம், தூய்மை, ஏன் கௌரவம் என்றெல்லாம் நினைத்து பெரிய மால்களில் டப்பாக்களில் அடைத்து அழகாக அடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை ஸ்டைலாக வாங்கி வந்து நம்முடையகுழந்தைகளுக்கு கொடுக்கிறோம். எல்லாம் சரி ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம், அது உணவல்ல நம் பிள்ளைகளை மெல்லக்கொல்லும் விஷம் என்பதை. இந்த உணவுகள் குழந்தைகளை பருமனாக்குவதுடன் பூப்பெய்துதலையும் முன் கூட்டியே நிகழசெய்கிறது.

இரசாயனம் கலந்த பொருட்கள்:

லேட்ஸ் (phthalates), பாராபின்ஸ் (parabens), பினோல்ஸ் என்னும் மூன்று ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால், ஹார்மோனில் அதீத மாற்றம் ஏற்படுகிறது. இந்த ரசாயனங்கள் நமது அன்றாட வாழ்வில் எளிதாக புலங்கும் பிளாஸ்டிக் பொருட்கள், வாசனை திரவியம், நகப்பூச்சு, பற்பசை, சோப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஓட்ஸ் உணவுகள்:

காடைக்கண்ணிஎன்னும்ஓட்ஸ் இன்று நம் நாகரிக வாழ்க்கைக்கான உணவுப்பட்டியளில் முக்கிய இடம் பிடித்திருப்பவை. உடல் பருமன் குறைய என்றும் இளமையாக இருக்க என பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த ஓட்ஸ் பயன்படும் என்று நாம் விளம்பரங்கள் வாயிலாக நம்ப வைக்கப்பட்டுள்ளோம்.

ஆரோக்யமாக இருக்கும் குழந்தைக்கு நாகரிக உணவை பழக்குகிறேன் என கூறி ஓட்ஸ் உணவை ஊட்டுகின்றனர் தாய்மார்கள். இந்த ஓட்ஸில் மேற்சொன்ன ஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து, ஓட்ஸை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிகூடுதலாக கலக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் விரைந்து முன் கூட்டியே பூப்பெய்துவதற்குஇதுவும் ஒரு காரணம்.

துரித உணவு:

துரித உணவுகள், ஜங் புட், ஃபர்ஸ்ட் புட் இன்னும் பல என ரகரகமாய் விதவிதமாய் நம் பிள்ளைகளின்வாழ்வை சீரழிக்க கூடிய ஏராளமான உணவு வகைகளும் அதனை விற்கும் கடைகளும் பல்கிபெருகி விட்டன.

முன்பெல்லாம் மாலை பொழுதில்அல்லது ஓய்வு நாட்களில் பெற்றோர்கள் சுடச்சுட அரோக்யமான திண்பண்டங்களை பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து மகிழ்வார்கள். அந்த திண்பண்டத்தை ருசிக்க பிள்ளைகளும் சில மணி நேரம் அடுப்பங்கரையிலேயே காத்திருப்பார்கள்.

ஆனால் தற்போது நினைத்த நொடியில் வீட்டிற்கே துரித உணவுகள் வந்து விடுகின்றன. இதனால் காத்திருக்கும் நேரம் குறைவதுடன், நம் வாழ் நாளும்குறைந்து விடுகிறது. இந்த துரித உணவுகளும் அவற்றில் கலக்கப்படும் ரசாயனங்கள் காரணமாக பெண் குழந்தைகள்முன் கூட்டியே பூப்பெய்துவதற்கு முக்கிய காரணியாகவும் இருக்கின்றன.

மேற்சொன்னது போக இன்னும் பல…..4a0c9d4e342fb9

எழுதியவர்: கண்மணி

Related posts

ஹெல்த் ஸ்பெஷல் சிறுநீர் அடக்கிவைக்கமுடியாமல் அடிக்கடி வருகிறதா?

nathan

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்

nathan

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… அப்பாவாக ஒரு ஆண் செய்யும் இந்த ஒரு தவறின் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்

nathan

பெற்றோர் சண்டையிடும்போது உங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்

nathan

மாவு பிசைகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.

nathan

தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! #DailyMotivation

nathan