24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
45240711 young mother holding her newborn child mom nursing baby woman and new born boy relax in a white bedr
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு எப்படி !!

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும். குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை!

இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:

* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.

* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.

* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.

* ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.45240711 young mother holding her newborn child mom nursing baby woman and new born boy relax in a white bedr

Related posts

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த உயிரனுக்களை அதிகரிக்கும் ஆலம்பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது.

nathan

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் பிரச்சனைகளை தீர்க்கும் கல்யாண முருங்கை

nathan

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

nathan

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்….!

nathan

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…

nathan

உங்கள் குழந்தைக்கு வாய் புண்களில் இருந்து விடுபட எளிய வழி!

nathan