25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 9058
ஆரோக்கியம் குறிப்புகள்

தலைவலி எதனால் வருகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

தலைவலி என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் “பெய்ன்கில்லர்’எல்லாம், உடலுக்கு கேடானது.

40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப்படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.

தலைவலிக்கான காரணங்கள்:

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.

கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி.

கண்களில் ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.

சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். நேராக நின்றால் தலை வலிக்காது. ஆனால், குனிந்தால் தலைவலி ஏற்படும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

தலைவலிக்கான தீர்வுகள்:

மூன்று நாட்களுக்கு மேல் தலைவலி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேன் தலைவலி ஏற்பட குறிப்பிட்டு எந்தக் காரணங்களையும் சொல்ல முடியாது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, மூளையில் இருக்கும் வேதியியல் ரசாயனங்கள் சரியான விகிதத்தில் சுரக்கவில்லை என்றாலோ, மைக்ரேன் தலைவலி வரும்.

தினமும் காபி அருந்தினால் தலைவலி நிற்கிறது என்று, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காபி அருந்திக்கொண்டே இருப்பதும் தவறு. இது சுழற்சியாக மாறி, காபி அருந்தாவிட்டால் தலைவலி ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

சிறு வயதில் இருந்தே சரிவிகித உணவை உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதையும், எட்டு மணி நேர முறையான தூக்கத்தையும் கடைப்பிடித்தால், தலைவலி வராமல் தடுக்க முடியும்.

தலைவலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். மைக்ரேன் வராமல் தடுக்கக்கூடிய மருந்துகளை, மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள 1 9058வேண்டும்.

Related posts

நீங்க பரம்பரை குண்டா ? அப்ப இத படியுங்க….

nathan

மளமளவென உயரமாவதற்கு இதனை செய்து வந்தாலே நமது உயரமானது அதிகரிக்கும்.

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தெரிஞ்சுக்கோங்க இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… படுக்கையறையில்

nathan

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

nathan

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

nathan

இறைச்சியை வாங்கும் கவனிக்க வேண்டியவை

nathan

இரவு நேர தூக்கத்தை விட பகல் நேரத்தில் தூக்கம் வருகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிந்துகொள்வோமா? மாதவிடாயின் போது முக அலங்காரம், சோப்பு பயன்படுத்தலாமா?

nathan