ஆரோக்கியம் குறிப்புகள்

திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?தெரிஞ்சிக்கங்க…

மணமகன் அல்லது மணமகள் யோசிக்க வேண்டிய கடைசி விஷயம், திருமண நாள் அன்று மழை பெய்தால் என்ன நடக்கும் என்பது தான். ஆனால் உண்மை என்னவென்றால், சில கலாச்சார மரபுகளின்ப டி திருமணத்தன்று மழை பெய்வது செழுமை மற்றும் தூய்மையை குறிக்கும்.

மேலும் திருமணத்தன்று மழை பெய்வது நல்ல சகுனம் என்று நம்பப்படுகின்றது. இது குறித்து மேலும் அறிந்து கொள்வோம்.

வானிலை எவ்வாறு இருக்கும்?

பேரிடர் தோன்றுவது போல் இருக்கும். இந்த நல்ல நாளில் இப்படிப்பட்ட வானிலையால் வியக்கத்தக்க விஷயம் ஏதேனும் நிகழுமோ அல்லது கெட்ட விஷயம் ஏதேனும் நிகழுமோ என்று திருமண வீட்டார் கவலை கொள்வார்கள். அதனால் வானிலை குறித்த அறிவிப்புகளை எப்போதும் எதிர்ப்பார்த்த வண்ணம் இருப்பார்கள்..

மழை ஒரு வரம்

மழையானது வறண்ட பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்கிறது மற்றும் பயிர்கள் வளர மிகவும் உதவுகிறது. எனவே இது வரமாகவும், நல்ல சகுனமாகவும் கருதப்படுகிறது. இதை மனதில் வைத்து பார்க்கையில், திருமண நாளின் போது மழை பெய்வது அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது.

மழை குறிப்பது..

உங்கள் வாழ்வின் முக்கியமான நாளில் மழை பெய்வது பல காரணங்களால் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. .மழையானது ஆசீர்வாதம், தூய்மை, ஒற்றுமை மற்றும் புதிய நாளை குறிக்கிறது. சில மரபுகளின் படி இது வளத்தினை குறிக்கின்றது. இதுப்போன்ற சில நேர்மறையான காரணங்களால் மழையானது நல்லதாகவே கருதப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நம்பிக்கை

முதலில் மழை என்பது ஆசீர்வாதத்தை குறிப்பதால் அனைவரும் தங்கள் திருமண நாள் அன்று ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆசீர்வாதம் என்பது நம்பிக்கை தொடர்புடையது. அனைத்தையும் நேர்மறையாக எடுத்து கொள்ளும் போது அவை நம் நம்பிக்கைக்கு வலு சேர்கின்றன.

செழுமை

ஆசீர்வாதம் என்பது செழுமையையும் குறிக்கும் – உடல் ரீதியாகவும் சரி, பொருள் ரீதியாகவும் சரி! எனவே மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய முக்கிய நாளன்று மழை பெய்வது நல்ல சகுனம் ஆகும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

புத்துணர்வு

மழை பெய்து முடிந்ததும் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழி கிடைகின்றது. எனவே திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் ஒரு புதிய தெளிவான மனநிலையுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்கலாம்.

வளம்

மழையானது வளத்தினையும் குறிகின்றது. நீர் என்பது வளர்ச்சிக்கு உதவுகிறது. பல தம்பதியினர் தங்கள் திருமணம் குழந்தை செல்வத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடனே திருமணம் செய்கின்றனர். எனவே பல கலாச்சாரங்களின் படி திருமணத்தன்று மழை பெய்வது அவர்களுக்கு பல குழந்தைகள் பிறக்கும் என்ற வரத்தினை அளிப்பதாக கருதுகின்றனர். குழந்தைகள் என்றால் வரம் என்பதில் சந்தேகம் இல்லை தானே!

பொருள் செல்வம்

வளம் என்பது ஆதாரம் மற்றும் உற்பத்தித்திறனை குறிப்பது போல் பொருள் செல்வத்தையும் குறிக்கும்.

ஒற்றுமை

திருமணத்தன்று மழை பெய்வது ஒற்றுமையை குறிக்கின்றது. இது மணமக்களின் ஒற்றுமையும் குறிக்கும்.

நல்ல எதிர்காலம்

திருமணத்தன்று மழை பெய்வது ஒரு நல்ல எதிர்காலத்தை குறிக்கும். இது ஒரு புதிய தொடக்கமாகவும், நல்ல அதிர்ஷ்டமாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே பார்த்ததைப் போல் இது ஆசீர்வாதம் மற்றும் வெற்றியை குறிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button