201806131511576050 1 sevai. L styvpf
ஆரோக்கிய உணவு

ருசியான முட்டை இடியாப்பம்

என்னென்ன தேவை :

முட்டை – 4
இடியாப்பம் (உதிர்ந்தது) – 2 கப்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 6
காய்ந்த மிளகாய் – 4
கடுகு, உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு சிறு கைப்பிடி

எப்படிச் செய்வது :

ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்தி வைக்கவும். சிறிது நேரத்தில் தேங்காய்ப்பாலை இடியாப்பம் உறிஞ்சியதும் பொலபொலவென உதிரியாகி விடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இடியாப்பத்தை கொட்டி நன்றாக கிளறி முட்டையை ஊற்றவும்.தீயை குறைவாக வைத்து இடியாப்பமும், முட்டையும் உதிரியாக வரும்வரை கிளறவும்.ஒரு மாறுபட்ட சுவையில் முட்டை இடியாப்பத்தை ருசித்து மகிழலாம்.201806131511576050 1 sevai. L styvpf

Related posts

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

nathan

தாய்மார்கள் எடுத்து கொள்ளும் மீன் எண்ணெய் மாத்திரைகள் குழந்தைகளின் உணவு அழற்சியை தடுக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்!

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan

சர்க்கரை தித்திப்பான தகவல்கள்…

nathan

தங்கமான விட்டமின்

nathan

அம்மை நோய் தீர்க்கும்… காளான்

nathan

எந்த வியாதி இருந்தாலும் இந்த ஒரு மருந்தை மட்டும் சாப்பிடுங்க…சூப்பர் டிப்ஸ்

nathan

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொய்யாப்பழம்!

nathan