28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 05 1451969343 4 red banana
ஆரோக்கிய உணவு

செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள்…

செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என உடல்நல நிபுணர்களும் கூறுகின்றனர்.

அதற்காக தினமும் அந்த சத்து நிறைந்த உணவுப் பொருளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறுகின்றனர். மேலும் பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சரி, இப்போது செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

4 05 1451969343 4 red banana

சிறுநீரக கற்களைத் தடுக்கும்

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.

எடையைக் குறைத்தல்

பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

இரத்த அளவை அதிகரிக்கும்

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும். எப்படியெனில் செவ்வாழையில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்பட்டு, சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது. எனவே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காளானை இவர்கள் சாப்பிடவே கூடாது ஏன் தெரியுமா…?

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி சூப்! தெரிஞ்சிக்கங்க…

nathan

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?

nathan

முள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan