Butter Chicken
ஆரோக்கிய உணவு

ருசியான பட்டர் சிக்கன் செய்முறை!

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
பட்டர் – 50 -75 கிராம்
காஷ்மீரி சில்லி பவுடர் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 2 (பெரியது)
முந்திரிப்பருப்பு – 10
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
புளிப்பில்லாத கட்டி தயிர் – 1 மேசைக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை ஒரே போல் மீடியம் சைஸ் துண்டுகள் போட்டு அதனை நன்கு சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, சில்லிபவுடர் 1 ஸ்பூன் போட்டு பிரட்டி ஊற வைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும்.
வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆறவைக்கவும்.
மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பின்பு கடாயில் பட்டர் விட்டு அதிகம் உருகும் முன்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.
பின்பு அதில் அரைத்த பேஸ்ட் சேர்த்து, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சிறிது சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதிவந்து மணம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பட்டர் சிக்கன் தயார்.Butter Chicken

Related posts

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால பழங்கள்!!!

nathan

ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

நிறை உணவு என்றால் என்ன?

nathan

இவற்றை நாம் எப்போதும் செய்து விடுவதே சிறந்தது!

sangika

உங்கள் கவனத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அன்றாட உணவில் தயிர்…!

nathan

எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சப்பாத்தி செய்ய சில டிப்ஸ்… இந்த ஒரே ஒரு பொருள் சேர்த்தாலே போதும்!

nathan

உங்களுக்கு தெரியுமா வாழைப்பழ தோலை கொதிக்க வைத்த நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan